Ticker

6/recent/ticker-posts

Ad Code



உ.பி: LUDO விளையாட்டில் தன்னை பணயமாக வைத்த இளம்பெண்.. மனைவியை மீட்டு தரும்படி புகார் கொடுத்த கணவன் !

நவீன உலகில் மக்கள் அனைவரும் நவீனமாக இருக்கவே விரும்புகின்றனர். அதன்படி சிறுவர்களும் தங்களை மாற்றிக்கொண்டே வருகின்றனர். அந்த காலத்தில் வெளியே சென்று விளையாடி வந்த குழந்தைகள் இப்போது வீட்டில் இருந்து மொபைல் போன்களில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அதோடு மொபைல் போன்களில் விளையாடுகின்றனர்.

அதிலும் குழந்தைகள் வீடியோ கேம் உள்ளிட்ட விளையட்டுக்களை விரும்பி விளையாடுகின்றனர். மேலும் அந்த காலத்தில் இருக்கும் 'தாயம்' விளையாட்டை மொபைல் போனுக்கு ஏற்றாற்போல் சிறிது மாற்றி 'லுடோ' என்ற பெயரில் அனவைரும் விளையாடி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டான இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விளையாடி வருகின்றனர்.

கொரானா காலத்தில் இந்திய மக்களிடம் பிரபலமான இந்த விளையாட்டை தற்போதும் பலரும் விளையாடி வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் விளையாட்டால் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். குஜராத்தில் ஊரடங்கின் போது, லுடோ விளையாடியபோது தோற்றதால் ஆத்திரப்பட்ட கணவன், தனது மனைவியை கடுமையாக தாக்கி முதுகெலும்பை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வளவு ஏன், சென்னையிலும் LUDO மூலம் பழக்கம் ஏற்பட்டு, 10ம் வகுப்பு சிறுமியை வீடியோகால் பேசவைத்து, அதனை இளைஞர் ஒருவர் ரெக்கார்ட் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவமும் அரங்கேறியது. இது போல் நிறைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அந்த வகையில் இளம்பெண் ஒருவர் தன்னை பணயமாக வைத்து லுடோ விளையாடி தோற்றுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிஜினோர் மாவட்டத்திலுள்ள நாகர் கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி என்ற தேவ்கலி என்ற கிராமம். இங்கு ரேணு என்ற பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கணவன் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்த பணத்தை வீட்டு செலவுக்காக மனைவிக்கு தினமும் அனுப்பி வந்துள்ளார். ஆனால் வீட்டில் தனியாக இருந்த மனைவி அந்த பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் 'லுடோ' விளையாடி வந்துள்ளார். இப்படியே தனது கணவர் அனுப்பிய பணத்தை முழுவதும், சூதாட்டத்தில் தொலைத்த அந்த பெண், இறுதியாக தன்னையே பணயமாக வைத்து விளையாடி வந்துள்ளார்.

அப்போதும் இவர் தோற்றதால், வீட்டின் உரிமையாளருடன் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து தனது கணவரிடம் அவர் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த கணவர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், "எனது மனைவி லுடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kalaignarseithigal



 


Post a Comment

0 Comments