80 வயதிலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட சூப்பர் பாட்டி!

80 வயதிலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட சூப்பர் பாட்டி!


மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாடா நிறுவனத்தின் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சிறுவர், சிறுமியர் முதல் 55 ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில் நானி என்ற 80 வயதான மூதாட்டி ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பாரம்பரிய முறையில் புடவை அணிந்து, கையில் தேசியக் கொடியையும் பிடித்தபடி 51 நிமிடங்களில் 4.2 கி.மீ. தொலைவுக்கு ஓடினார். இந்தப் பாட்டியின் உற்சாகமான ஓட்டம் பலரையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்தது.

செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த நானி பாட்டி, “நான் இந்தியராகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். அனைவரும் நமது பாரம்பரியத்தின் சிறப்பை உணர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார். அவர் கலந்துகொள்ளும் ஐந்தாவது மாரத்தான் ஓட்டம் இது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆரோக்கியமான இந்த மூதாட்டியின் மாரத்தான் ஓட்டம் பற்றி அவரது பேத்தி டிம்பிள் மேத்தா பெர்னாண்டஸ் இஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். உடனே அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலானது.

நானி பாட்டியின் வீடியோவைப் பார்த்த அனைவரும் அவரது ஆர்வத்தைக் கண்டு ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

SOURCE;asianetnews



 


Post a Comment

Previous Post Next Post