ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!!

பரபரப்பாக நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னணிலை வகித்தார். இதனால் திமுக, காங்கிராஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 13 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்தார். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் 7,984, தேமுதிக 1,115 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

asianetnews



 



Post a Comment

Previous Post Next Post