Ticker

6/recent/ticker-posts

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் வித்தியாசமான தண்டனை

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் புதியதொரு சட்டம்... மதுபோதையில் வாகனம் செலுத்த எண்ணுவோர் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது...

புதிய சட்டத்தின் கீழ், குடிபோதையில் செலுத்தப்படும் வாகனத்தால் அடிபட்டு மடிவோருக்குச் சிறு பிள்ளைகள் இருந்தால் வாகனம் ஓட்டியவர் அந்தப் பிள்ளைகளுக்கு 18 வயதாகும்வரை நிதியாதரவு வழங்கவேண்டும். 

கவனக்குறைவான செயலுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்பதை அதிகாரிகள் புதிய சட்டத்தின் மூலம் உணர்த்த முனைவதாகக் கூறுகின்றனர். 

போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றத்துக்கு ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் சிறையிலிருந்து வெளியான பிறகு நிதியாதரவு வழங்கத் தொடங்குவதற்கு அவருக்கு ஓராண்டு அவகாசம் அளிக்கப்படும். 
 
SOURCE;seithi.mediacorp



 


Post a Comment

0 Comments