
என்றும் நலம் வாழ என்ற தொடரின் மூலமாக நாம் பல்வேறு மருத்துவ தகவல்களை பார்த்து வருகின்றோம்.
இதுவரை கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் பற்றியும் பார்த்தோம்.
ஒவ்வொரு தொடரிலும் நாம் தாது உப்புக்கள் பற்றி பார்த்து வருகின்றோம் இந்த வார தாது உப்புக்களின் தொகுப்பில் உள்ள தாது உப்புக்களின் முன்னோட்டத்தை பற்றி பார்க்கலாம்.
பொட்டாசியம்- இது வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.
கந்தகம் -மென்மையான ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குகிறது.அயோடின்- தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது
.இரும்பு சத்து -உங்கள் மனநிலை மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.வைட்டமின் பி12- ரத்த சிவப்பு அணு உற்பத்திக்கு உதவுகிறது.மெக்னீசியம் -தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது.கால்சியம் -வலுவான எலும்புகளை பராமரிக்கிறது.சிலிக்கான்- சருமத்திற்கு அதன் நிகழ்ச்சி தன்மையை அளிக்கிறது. தாமிரம்- இருதய நோயை தடுக்க உதவுகிறது.பாஸ்பரஸ்- எலும்பு மற்றும் பற்கள் உருவாவதற்கு பங்களிக்கிறது.
பொட்டாசியம் என்பது உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான எலக்ட்ரோலைட் ஆகும். பொட்டாசியத்தை சரியான அளவில் நாம் எடுக்கும் பொழுது உயர் ரத்த அழுத்தம் அதாவது high blood நிர்வகிப்பதற்கு தேவையான ஒரு தாது உப்பு ஆகும்.
இன்று ஏறக்குறைய ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பத்தில் எட்டு என்ற எண்ணிக்கையின் அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
எனவே ஒருவருக்கு சரியான அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இருந்தால் இருதய நோய் மற்றும் பக்கவாதத்தை தவிர்க்கலாம்.
பொட்டாசியம் எலும்பு ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்பவர்களுக்கு எலும்பில் தாது அடர்த்தி அதிகமாக இருக்கும்.
சரி எந்தெந்த உணவுகளை பொட்டாசியம் நிறைந்த உணவுகள் என்பதை பார்க்கலாம்.
உலர்ந்த பாதாமின் பழங்கள்
சமைத்த பருப்பு,உலர்ந்த கொடி முந்திரி,வேக வைத்த உருளைக்கிழங்கு
,கிட்னி பீன்ஸ்,சோயா பீன்ஸ்,வாழைப்பழம்,பால்
போன்ற உணவுகளில் அதிக அளவில் மற்ற உணவுகளில் குறைந்த அளவும் காணப்படுகின்றது.
எனவே பொட்டாசியம் உடல் நலக்குறைவுகளுக்கு சிகிச்சை அளிக்க அல்லது தடுக்க உதவும்.
சரி பொட்டாசியம் குறையும் பொழுது என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றது என்பதை பார்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம்
சிறுநீரக கற்கள் எலும்புகளில் குறைந்த கால்சியம் அளவு மலச்சிக்கல்,சோர்வு,தசை பலவீனம்,உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற உணர்வு .ஒருவருக்கு பொட்டாசியம் அளவு 2.5 mmol/l மிகவும் குறைவாக இருந்தால் மருத்துவர்கள் மிக கடுமையான குறைபாடு என்று கூறுவார்கள்.
இது அதிக சிறுநீர் உற்பத்தி,
குளுக்கோஸ் ஏற்றுக்கொள்ளாத தன்மை, தசை முடக்கம் ,சுவாசப் பிரச்சினைகள் , இருதய நோய்போன்றவை ஏற்படும்.
பொட்டாசியம் குறித்த தகவல்களை அடுத்த வாரத் தொடரில் விரிவாக காணலாம்.
என்றும் வேட்டை வாசகர்களுக்காக
உங்களுடன்

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
தொகுப்பு :
உங்கள் குறள் யோகி,
தமிழ்ச் செம்மல்,
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments