இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு மனைவியை பிரிந்துள்ளார். விவாகரத்துக்குப் பின் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்ற சபதத்துடன் டேவிட் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் தான் டேவிட் ஏஸ், அமேண்டா சந்திப்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நட்பு, டேட்டிங் காதல் என்று வளர, கடந்தாண்டு இருவரும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம் என முடிவெடுத்தனர்.
டேவிட் ஏஸ்சுக்கு முதல் திருமணத்தின் மூலம் 21 வயதில் மகனும், 20 வயதில் உள்ளனர். அமேண்டாவின் அழகில் மயங்கிய தனது சபதத்தை மீறி இரண்டாவது திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தாக டேவிட் ஏஸ் தெரிவித்துள்ளார். இத்தனை வயது வித்தியாசம் கொண்டவரை திருமணம் செய்யலாமா என அமேண்டாவை பலரும் வியப்புடன் விமர்சித்துள்ளனர்.
அதற்கு பதில் அளித்துள்ள அமேண்டா, அவரது மகளை விட 7 வயது தான் மூத்தவள் நான். இருப்பினும் எங்கள் இருவருக்குமிடையே உறவில் எந்த குறைபாடும் இருந்ததில்லை என்றார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணமானது. அமேண்டா திருமணத்திற்கு முன்பே டேவிட் மூலமாக கர்ப்பம் தரித்துள்ளார். அமேண்டாவுக்கு ஜூன் மாதம் குழந்தை பிறக்கவுள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments