Sun Breaks Off: சூரியனின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது! விண்வெளி புதிருக்கு விடை தேடும் விஞ்ஞானிகள்!

Sun Breaks Off: சூரியனின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது! விண்வெளி புதிருக்கு விடை தேடும் விஞ்ஞானிகள்!


சூரியனில் ஒரு பகுதி திடீரென வெடித்துச் சிதறி சூறாவளி ஏற்பட்டிருப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூரியன் தொடர்ச்சியாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது சூரியன் புதிய புதிர்களை உருவாக்கிய வண்ணம் உள்ளது.

சூரியனில் இருந்து ஒரு மிகப்பெரிய பகுதி வெடித்து சிதறியது என்றும் அந்தக் காட்சி நெருப்பு சூறாவளி போன்று இருந்தது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சூரியனின் வடதுருவப் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் உள்ள தொலைநோக்கி பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதனை விஞ்ஞானி டாக்டர் தமிதா ஸ்கோவ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து பகிர்ந்து வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக சூரியனை ஆராய்ச்சி செய்துவரும் நாசா விஞ்ஞானி ஸ்காட் மெக்கின்டோஷ், “இதுபோன்ற ஒரு நிகழ்வை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. சூரியனில் ஒரு பெரிய பகுதி விசிறி அடிக்கப்பட்டு அது வளிமண்டலத்தில் வலம் வருவதை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

சூரியனிலிருந்து சிறிய துண்டுகள் வெடிப்பது எப்போது நிகழ்ந்துகொண்டே இருப்பது வழக்கம். ஆனால் இவ்வளவு பெரிய பகுதிய வெடித்துச் சிதறியது புதிராக இருப்பதாக விஞ்ஞானிகளுக்கே வியப்பு ஏற்பட்டுள்ளது. சூரிய வெடிப்பு பெரிதாக இருக்கும்போது பூமியின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
asianetnews




 


Post a Comment

Previous Post Next Post