6 வயது சிறுமியை கடித்த பிட்புல் நாய்.. 12 மணி நேர அறுவை சிகிச்சை: முகத்தில் 1000 தையல்கள்!

6 வயது சிறுமியை கடித்த பிட்புல் நாய்.. 12 மணி நேர அறுவை சிகிச்சை: முகத்தில் 1000 தையல்கள்!


உலகம் முழுவதும் வளர்ப்பு நாய்களில் மிகவும் ஆபத்தான நாயாக பிட்புல் நாய் மாறி வருகிறது. சமீபகாலமாகவே பிட்புல் நாய் தன்னுடைய உரிமையாளர்களையே கடித்து காயப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலத்தில், பிட்புல் நாய் கடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று சிறுவர்கள், குழந்தைகளையும் பிட்புல் நாய் கடித்துள்ளது. இதனால் இந்த நாயை வளர்ப்பவர்கள் எப்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் 6 வயது சிறுமியின் முகத்தை பிட்புல் நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓகையோ மாகாணத்தில் உள்ள செஸ்டர்விலே பகுதியைச் சேர்ந்தவர் டோரதி நார்டன். இவரது 6 வயது மகள் லில்லி. இவர் பக்கத்து வீட்டில் உள்ள தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த பிட்புல் நாய் திடீரென பாய்து லில்லி முகத்தை கடித்துக் குதறியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வீட்டின் உரிமையாளர்கள் நாயிடம் இருந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 12 மணி நேரம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 1000 தையல்கள் போடப்பட்டுள்ளது.
தற்போது சிறுமி வாய் திறந்து பேசமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். சிறுமியின் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர். 'தங்கள் மகள் லில்லியால் இனி மீண்டும் சிரிக்க முடியாத அளவுக்கு அவளின் முக நரம்புகள் சேதடைந்துள்ளது' என அவரது பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post