63,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்ட Iphone

63,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்ட Iphone

Iphoneஇன் முதல் தொகுப்பைச் சேர்ந்த கைத்தொலைபேசி கேரன் கிரீனுக்கு (Karen Green) 2007ஆம் ஆண்டில் பரிசாகக் கிடைத்தது.

ஆனால் அவர் அதனைத் திறக்காமலே வைத்திருந்தார்.

16 ஆண்டுகளுக்குப்பின் கேரன் அதனை 63,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்றதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஏலம் இம்மாதம் 19ஆம் தேதி நடந்தது.

2007இல் கேரனின் நண்பர்கள் அவருக்குப் புது வேலை கிடைத்ததற்காக அவருக்கு அந்த Iphoneஐப் பரிசாய் வழங்கியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

அவர் புதிதாக ஒரு கைத்தொலைபேசியை வாங்கியிருந்ததால் அவர் அதனைத் திறக்காமல் வைத்திருந்தார்.

Iphoneஇன் முதல் தொகுப்பைச் சேர்ந்த கைத்தொலைபேசிகள் திறக்கப்படாமல் புத்தம்புது நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை விற்றால் கணிசமான தொகை கிடைக்க வாய்ப்புண்டு.
mediacorp

ஆதாரம் : Others




 



Post a Comment

Previous Post Next Post