சவுதி அரேபிய அரச குடும்பத்துக்குச் சொந்தமான லண்டன் சொகுசு மாளிகை விற்பனைக்கு வந்துள்ளது

சவுதி அரேபிய அரச குடும்பத்துக்குச் சொந்தமான லண்டன் சொகுசு மாளிகை விற்பனைக்கு வந்துள்ளது

லண்டனில் ரீஜென்ட் பார்க்கில் (Regent Park) அமைந்துள்ள 205 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 'The Holme' சொகுசு மாளிகை விற்பனைக்கு வந்துள்ளது. 

சவுதி அரேபிய அரச குடும்பத்துக்குச் சொந்தமான அந்த மாளிகையின் தொடக்க விலை 250 மில்லியன் பவுண்ட்.

மாளிகைக்குச் சொந்தக்காரர் சவுதி அரேபிய இளவரசர் காலிட் பின் சுல்தான் அல்-சவட் (Khaled bin Sultan al-Saud). 

சவுதியில் அரச குடும்பத்தார் உட்பட அரசாங்கத்தின் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளைப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மா (Mohammed bin Salmah) நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

அவை அரச குடும்பத்தாரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த விற்பனை புலப்படுத்துவதாக Financial Review சஞ்சிகை கூறுகிறது.

இளவரசர் காலிட் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சவுதி அரச குடும்பத்துக்கு மிக நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது. 

'The Holme' சொகுசு மாளிகையைச் சிறிய பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை என்று சொத்து முகவர்கள் அழைக்கின்றனர். 1.6 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மாளிகையில் 40 படுக்கையறைகள் உள்ளன.

1991ஆம் ஆண்டு அந்த மாளிகைக்கான குத்தகையை நீட்டிப்பதற்கு இளவரசர் காலிட் 43 மில்லியன் டாலர் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
 mediacorp
ஆதாரம் : AGENCIES



 



Post a Comment

Previous Post Next Post