Ticker

6/recent/ticker-posts

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணைகளைப் பாய்ச்சிய வட கொரியா

வட கொரியா, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளைப் பாய்ச்சியிருக்கிறது.

கிழக்குக் கரையோரத்தில் உள்ள சின்போ (Sinpo) நகரிலிருந்து அவை பாய்ச்சப்பட்டதாய்த் தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து நடத்தும் ராணுவப் பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா அந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

ராணுவப் பயிற்சிகள் இன்று தொடங்கி, குறைந்தது 10 நாட்களுக்குத் தொடரும்.

ஐந்தாண்டுகளில் நடத்தப்படும் ஆகப் பெரிய ராணுவப் பயிற்சி அது.

இதற்கு முன்னதாக, அதுபோன்ற பயிற்சிகள் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் என்று பியோங்யாங் (Pyongyang) எச்சரித்திருந்தது.
mediacorp
ஆதாரம் : AGENCIES



 



Post a Comment

0 Comments