மழைபோல பெய்யும் பனி.. காலநிலை மாற்றத்தால் கதிகலங்கும் அமெரிக்கா.. ஷாக் போட்டோஸ்!

மழைபோல பெய்யும் பனி.. காலநிலை மாற்றத்தால் கதிகலங்கும் அமெரிக்கா.. ஷாக் போட்டோஸ்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கத்திற்கு மாறான பனிப் பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பொழியும் பனியால் நகரம் முழுவதும் பனி போர்வையால் மூடப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவு தற்போது பிப்ரவரி மாதத்தில் பொழிந்து வருவது காலநிலை மாற்றத்தினால் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பனிப்புயலைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது நியூயார்க் நகரத்தில் தான். சுமார் 3 அங்குலம் அளவு பனிப்பொழிவு சாலை மற்றும் வீடுகளை மூடியுள்ளது.

1869 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது ஏற்படும் இந்த பொழிவு தான் மிகப் பெரிய பனிப்பொழிவாகக் கருதப்படுகிறது. சாலைகளில் படர்ந்து கிடக்கும் பனியால் மக்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் வெளியில் பனி சூழ்ந்து பரந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் சென்டரல் பார்க் பகுதியில் மட்டும் சுமார் 1.8 அங்குலம் அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதர காலங்களில் பதிவானதை விட தற்போது பதிவாகியுள்ள பனிப்பொழிவின் அளவு தான் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாங் ஐலாண்டு பகுதியில் சுமார் 5 அங்குலம் அளவு பனி சாலையில் படர்ந்து உபயோகப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் அவசரக்கால மேலாண்மை, பனிப்பொழிவின் காரணமாகக் காலை 6 மணியில் இருந்து 1 மணி வரை மக்களை வெளியில் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் சுமார் 40 அங்குலம் பனி சூழ்ந்து காட்சியளித்தது. மேலும் அதில் 39 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தினால் தான் இது போன்ற வழக்கத்திற்கு மாறான பனிப்பொழிவு ஏற்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பனிப்புயலில் தாக்கத்தினால் பனிப்பொழிவு மேலும் நீடிக்கும் அபாயம் உள்ளதால் அரசு பனியில் இருந்து மக்களைக் காக்க போதுமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைகளில் படர்ந்து இருக்கும் பனியை நீக்கும் பனிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மக்களும் அவரவர் வீடுகளைச் சூழ்ந்துள்ள பனிகளை நீக்கி வருகின்றனர். கலிபோர்னியா பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் அங்கும் மக்களில் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

news18




 



Post a Comment

Previous Post Next Post