செயலறிஞர் ஸ்டாலின் எழுபதாவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து!

செயலறிஞர் ஸ்டாலின் எழுபதாவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து!


அகவை எழுபதில் 
அடியெடுத்து வைக்கும்
ஓய்வறியாச் சூரியனாய்
ஓயாமல் உழைக்கும்
திராவிடக் கூட்டத்தை
திராவிடமாடல் கொண்டு
தீவிரமாய் வழிநடத்தும்
திராவிடத் தலைமகனே!
உங்களில் ஒருவனென்று
உளமார கூறிக்கொண்டு
எங்களொடு பயணிக்கும்
தங்கத் தளபதியே!

அய்யன் வள்ளுவனின்
அறவழியை ஆட்கொண்டு
பகுத்தறிவுப் பகலவனின்
பகுத்தறியும் துணைகொண்டு
பேரறிஞர் அண்ணாவின்
பேராற்றல் மிகக்கொண்டு
முத்தமிழ் அறிஞரின்
முக்கால திறன்கொண்டு
இனமானப் பேராசான்
இனங்கண்டு எமக்கீந்த
இனங்காக்கும் அரணாக
இருந்தெம்மை ஆட்கொண்ட
செயற்கரிய செயலாற்றும்
செயலறிஞர் ஸ்டாலின்!

நித்தம் ஒருதிட்டம்!
நித்திலமாய் நாளும்!
எத்திக்கும் புகழ்மணக்கும்
தித்திக்கும் நலத்திட்டம்!
ஒன்றிணைவோம் வாவென்று
ஒற்றுமையை வலியுறுத்தி
ஒன்றியத்தின் ஆட்சியரை
ஒண்ட விடாதடுத்தாய்!
இன்னுயிரைக் காக்க
"இல்லந்தேடி மருத்துவம்!"
நுண்ணுயிர் கொரானாவால்
கண்ணாம் கல்வியை
பாதியில் விட்டுச்சென்ற
பாமர மாணாக்கரை
இனித்துரைத்து கல்விபெற
"இல்லந்தேடி கல்வி!"
இளைய தமிழகம்
தலை நிமிர்ந்திட
திறன் மேம்பாட்டில்
தலை சிறந்திட - சென்ற
நின் பிறந்தநாளில்
"நான் முதல்வன்!"
கடைகோடி மனிதனையும்
திட்டங்கள் சென்றடைய
எழுபதாம் அகவைநாளில்
"ஏற்றமிகு ஏழுதிட்டங்கள்!"

சிறகிழந்த பறவையாய்
சிக்கித் தவித்த 
அடிமைத் தளையில்
அண்டி வாழ்ந்த
பெண்கள் பயனுறுவே
பிறப்பித்தாய் சட்டங்கள்!

சிறகுக்குள் வானத்தை
சிறைபிடித்து சிறக்கவாழ
பேருந்து பயணத்தில்
பெண்டிற்கு இலவசம்!
உயர்கல்வி கற்று
உன்னதம் எய்திடவே
புதுப்பித்தாய் மாற்றாக
"புதுமைப்பெண்"திட்டமென்று!
எத்தனையோ திட்டங்கள்!
அத்தனையும் அற்புதங்கள்!
அனைவரையும் அரவணைத்து 
வானுயர மேலுயர்த்தும்
அருமையான திட்டங்கள்!
பெருமைமிகு திட்டங்கள்!
உழைப்பால் உயர்ந்த
உன்னதத் தலைவனே!
பாராள வந்த 
பறம்பின் பாரியே!
தாராளமாய் நீதரும்
தரமான திட்டத்தால்
ஏராளமாய் எளியோர்
ஏற்றம் பெறுவர்!

காரிருளைக் கிழிக்கும்
செங்கதிரோன் போல!
வானின்று வழங்கும்
இனிய மாரியைப்போல!
வேண்டுதல் வேண்டாமையின்றி
வேறுபாடு ஏதுமின்றி
சமத்துவ சமுதாயத்தை
செதுக்கும் சிற்பியே!
நீதிக்கட்சி ஆட்சியின்
நீட்சியாய் வந்த
சமூகநீதிக் காவலரே!
சமத்துவ முதல்வரே!
வாழ்க பன்னூறாண்டு!
வாழிய வாழியவே!

வாழ்த்தும்
கோ.இமயவரம்பன்
சிட்லபாக்கம்
01.03.2023


 



Post a Comment

Previous Post Next Post