சுனாமி, எரிமலை சீற்றங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் பெரும்பாலும் இந்தோனேசியாவில் ஏற்படுகின்றன. இந்தோனேசியா தீவில் மட்டும் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை எப்போதும் வெடிக்கலாம் என்ற நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் செயலில் உள்ள எரிமலைகளில் மெராபி (Merapi) மலைப்பகுதியில் உள்ள எரிமலை ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. ஜாவா தீவில் அதிக மக்கள் வசிக்கக் கூடிய மெராபி பகுதியில் உள்ள இந்த எரிமலை சில நாட்களாக லேசாக குமுறிய எரிமலை திடீரென வெடித்து சாம்பல் புகையை கக்கியது.
300 அடி உயரத்திற்கு மேக கூட்டம் போல புகை மண்டலம் தேங்கி நிற்கிறது. மலைப்பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை கிராமங்களை சாம்பல் தூசுகள் மூடியுள்ளதால், அங்கு இருப்பவர்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற ஜாவா தீவில், மெராபி மலைக்கு அருகில் உள்ள மற்றொரு மலையில் இருந்து எரிமலை வெடிப்பதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments