Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி -22

வேட்டைவாசகர்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்...... 

ஒவ்வொரு தொடரிலும் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களை நாம் பார்த்து வருகின்றோம். அதில் முன் சென்ற தொடரில் உணவுகளின் வகைகள் அவற்றில் உள்ள பிரிவுகள் பற்றி பார்த்தோம். ஒவ்வொரு சுவையும் உள்ளடக்கிய உணவுப் பொருட்களை இந்தத் தொடரில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

 


முதலில் இனிப்பு இனிப்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை எனலாம்.
இனிப்பு சுவையில்  தேன் ,வெள்ளம், கோதுமை, சிறுதானியங்கள், பார்லி, ஆப்பிள், திராட்சை ,முலாம்பழம் ,கம்பு ,பேரிக்காய், மக்காச்சோளம் ,வெங்காயம், அத்திப்பழம், கேரட் மற்றும் இன்னும் பல ..புளிப்பு சுவை
  எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, புளி, பூசணி, தயிர் ,பாலாடை கட்டி, ஸ்ட்ராபெரி, நெல்லிக்காய் ...உப்பு சுவையில் கல், உப்பு, இந்துப்பு ,பீர்க்கங்காய், முள்ளங்கி, சுரைக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய்.....
கசப்பு சுவையில் பாகற்காய், வேப்பிலை, சிறியா நங்கை, கீரை ,வெந்தயம் எள்,நிலவேம்பு ,தூதுவேளை....காரம் சுவையில்   மிளகு, மிளகாய் ,வெங்காயம், பூண்டு, இஞ்சி, வெற்றிலை, துளசி, பெருங்காயம்....

என்ன???? சுவைகளைப் பற்றியும், சுவையில் இருக்கக்கூடிய உணவுகளை பற்றியும் கூறுகின்றீர்களே, இதனால் என்ன பலன் இருக்கிறது என்று கேட்பது எனக்கு புரிகிறது ....இதோ வருகிறேன் ..

இனிப்பு
இனிப்பு சுவை நிலம் மற்றும் நீரை குறிக்கிறது
இந்த சுவை கபத்தை அதிகரிக்கிறது, பித்தம் மற்றும் வாதத்தை குறைக்கின்றது, இந்த சுவை குளிர்ச்சி மற்றும் கபத்தை அதிகரிக்கிறது, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி மற்றும் வளத்தை கொடுத்து பசி மற்றும் தாகத்தை நீக்குகிறது ,அனைத்து திசுக்களையும் வளர்கின்றது .
   
புளிப்பு நிலம் மற்றும் நெருப்பை குறிக்கிறது
இந்த சுவை கபம் மற்றும் பித்தத்தை அதிகரிக்கிறது, வாதத்தை குறைக்கிறது, இந்த சுவை வெப்பம் மற்றும் உடலின் கனத்தை அதிகரிக்கிறது, இது புத்துணர்ச்சி அளிக்கிறது ,கழிவு பொருட்களை வெளியேற்ற உதவுகிறது, நடுக்கம் மற்றும் வலிப்பை குறைக்கிறது, பசி மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காரம் காற்று மற்றும் நெருப்பு
பித்தம் மற்றும் வாதத்தை அதிகரிக்கிறது, கபத்தை குறைக்கிறது, வெப்பம் இலகு தன்மை மற்றும் உலர்ந்த தன்மையை ஏற்படுத்துகிறது, இது சுரப்பிகளின்  நீர்கள் அனைத்தையும் அதிகரிக்கிறது, விந்து, கொழுப்பு திசுக்களின் செயல்பாடுகளை,  குறைக்கிறது பசியை அதிகரிக்கிறது .

கசப்பு  காற்று மற்றும் ஆகாயம்
கபம் மற்றும் பித்தத்தை குறைக்கிறது, வாதத்தை அதிகரிக்கிறது, குளிர்ச்சி இலகு மற்றும் உலர்ந்த சூழ்நிலையை உருவாக்குகிறது, சுரப்பிநீர்களை அதிகரித்து, உடலை உலர செய்கிறது ,உடலில் உள்ள அனைத்து சுவைகளையும் சமநிலைப்படுத்த உதவுகிறது, தோல் நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்துகிறது, பசியை அதிகரிக்கிறது  .

துவர்ப்பு காற்று மற்றும் நிலம்! 
வாதத்தை அதிகரிக்கிறது, கபம் மற்றும் பித்தத்தை குறைக்கிறது ,இலகுவான உடல்நிலை குளிர்ந்த மற்றும் உலர்ந்த தன்மையை ஏற்படுத்துகிறது ,துவர்ப்பு அனைத்து உடல் உறுப்புகளையும் சுத்தப்படுத்தி குணப்படுத்துகிறது, சுரப்பிகளை  சரி செய்யவும்  பயன்படுகிறது..

சரி இதை இவையெல்லாம் எதற்காக கூறுகிறீர்கள் என்று கேட்பது புரிகிறது? ஆம் நமது உணவு நமது உடல் இவை அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என்று சொன்னால் நாம் உண்ணும் உணவே அடிப்படையான ஒரு காரியம் ஆகின்றது. அடிப்படையை சுவையின் மூலமாக சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு சுவையும் நமது ஒவ்வொரு தோஷங்கள் எனப்படும் வாதம், பித்தம் ,கபம் இவை மூன்றையும் சரி செய்ய பயன்படுகிறது. எனவே சுவையை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி அடுத்த தொடரில் காணலாம், மற்றும் இந்த சுவைகள் உடலில் அதிகமாகும் பொழுது ஏற்படக்கூடிய நோய்களையும் நாம் காணலாம் 

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. 
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).    


 



Post a Comment

0 Comments