
சிலியில் 5,000க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஒரு மரம் நிற்கிறது.
'முப்பாட்டன்' என்றழைக்கப்படும் அது உலகின் ஆக வயதான மரம் என்ற அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.
Fitzroya cupressoides வகையைச் சேர்ந்த மரத்தின் உயரம் 28 மீட்டர் ...அதனுடைய நடுத்தண்டின் விட்டம் 4 மீட்டர்.
தலைநகர் சாண்டியேகோவிலிருந்து (Santiago) 800 கிலோமீட்டர் தொலைவில் லோஸ் ரியோஸ் (Los Rios) வட்டாரத்தில் உள்ள வனத்தில் மரம் உள்ளது.
மரத்தைக் காண்பதற்கு அண்மை ஆண்டுகளாகச் சுற்றுப்பயணிகள் பலர் வனத்திற்குச் செல்வதுண்டு.
பூமி பருவநிலை மாற்றத்தைக் கடந்து வந்துள்ளதற்கான தகவல் மரத்தில் மறைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நடுத்தண்டில் உள்ள வளையங்களில் வரலாற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி, மழை, நிலநடுக்கம், தீ போன்றவற்றை அறியமுடியும்.
தற்போதைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் உள்ள 4,850 வயதுடைய Great Basin bristlecone pine வகை மரம் ஆக வயதானதாகக் கருதப்படுகிறது.
mediacorp
ஆதாரம் : AFP
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)




0 Comments