ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீனால் 5ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. சூர்ய குமார்யாதவ் 15 ரன்னில் வெளியேற, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 84 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி தடுமாறிக் கொண்டிருந்தது.
இதன் பின்னர் இணைந்த திலக் வர்மா நெஹல் வதேரா இணை சரிவை மீட்டெடுத்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நெஹல் வதேரா21 ரன்னும், டிம் டேவிட் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க அர்ஷத் கான் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 171 ரன்களை குவித்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – கேப்டன் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர்.
இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் விக்கெட்டிற்கு இருவரும் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூப்ளசிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும 6 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் இறங்கிய மேக்ஸ்வெல் சர்வ சாதாரணமாக 2 சிக்சர்களை விளாசினார். விராட் கோலி 49 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 89ரன்கள் எடுக்க பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஏற்கனவே கடந்த 10 சீசன்களாக பெங்களூரு அணி முதல் போட்டியில் தோல்வியடைந்து வரும் நிலையில், இந்த சீசனின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டுள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு