Ticker

6/recent/ticker-posts

Ad Code

நலம் வாழ -மருத்துவப் பகுதி-31

அன்பார்ந்த வேட்டை வாசகர்களுக்கு.... நலம் வாழ என்று தொடரின் மூலமாக ஆரோக்கியமாக வாழக்கூடிய வழிமுறைகளை நாம் பார்த்து வருகின்றோம்.

எந்த தவறான பழக்க வழக்கங்கள் எல்லாம் நமது ஆரோக்கியத்தை நலமற்றதாகஆக்குகிறது என்பதை குறித்தும்அலசி ஆராய்ந்து வருகின்றோம்.
  

சென்ற வார தொடரில் ரத்த அழுத்தத்தை குறித்து ஒரு பகுதியில்....

பாஸ்கரன் பிபி அதிகமானதால் வேகமாக ஓடினானா ?

அல்லது அவன் வேகமாக ஓடியதால் ரத்த அழுத்தம் அதிகமானதா?

அவன் ஒருவன் ஓடும் பொழுது ரத்த அழுத்தம் அவசியமானதா? 

அல்லது ஆபத்தானதா?  

சரி காரணம் என்ன?  

எனினும் இருதயம் பிழை செய்து விட்டது. அதை நாம் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை கொடுத்து கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது ஒரு சாராரின் கூற்று.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிழையா? அல்லது சரியா? என்பதை குறித்து இந்த வாரம் தொடரில் நாம் காணலாம்.

ரத்த அழுத்தத்தில் இரண்டாவது தொடராக ஒவ்வொருவரின் உடல் இயற்கையும் உயிராற்றலும் அதன் தகுதிக்கு ஏற்றவாறு தனித்தன்மைக்கேற்றவாறு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவும் நலப்படுத்திக் கொள்ளவும் முயலும்!முடியும்.. 

இந்த இயற்கை நியதியை சிறிதும் பொருட்படுத்துவதில்லை நாம் மனித உடலுக்குள் நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி போராடும்போது ஏற்படும் விளைவை இயற்கை நிகழ்வை தவறு என்றும்! அறிகுறிகளை நோய் என்றும் தவறான ஒரு சிந்தனையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான மருத்துவத்தை நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பிட்ட ஒருவரின் அனைத்து உடல் உபாதைகளும் ரத்த  அழுத்தம் தான் முழு முதல் காரணம் என்று ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு நோயின்  அறிகுறிகளையும் வெளிக்கொணராமல் உள் அமுக்குவது என்பது நீண்ட கால நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதற்கு சமமானதாகும்.

எந்த ஒரு நோய்க்காக தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள நேர் இடுகின்றதோ அதுவரை அந்த நோய் நீங்கவில்லை என்பதே நிஜம்.ஆனால் தற்போது நடைபெறுவதோ அதற்கு மாற்றமாக இரத்த அழுத்த மருந்துகளை நிறுத்தினால் அபாயம் என்று அதை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு அவல நிலை இன்று நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சரி! இதற்கு என்ன தீர்வு?
ஒவ்வொரு மனிதனும் முறையே தனித்தனி தன்மை வாய்ந்தவர்கள் எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒருவர் மற்றவரிடம் இருந்து வேறுபட்டவரே !ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இடையிலும் கூட எண்ணற்ற வித்தியாசங்கள் இருக்கின்றன ஒவ்வொருவரின் மனமும், மனநிலையும், குணமும், எண்ணங்களும், சிந்தனைகளும் அனுபவங்களும், உணர்வுகளும் உடல்வாகும், உடல் உழைப்பும், மரபு வழியும் ,தொழிலும், விருப்பங்களும், இன்னும் ஒவ்வொன்றும் வெவ்வேறானவை எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, நிச்சயமாக இருக்கவும் முடியாது.

இயற்கை அமைப்பை ஏற்காத  நிலையில் ,வெவ்வேறான எல்லோருக்கும் ஒரே அளவில் தான் சர்க்கரை இருக்க வேண்டும் அல்லது ரத்த அழுத்தம் இருக்க வேண்டும் என்று கூறுவது எவ்வளவு ஒரு அபத்தமான ஒரு வாதம்!?

அதுவும்  ஒரு குறிப்பிட்ட அளவின்படி தான் இருக்க வேண்டும் கூடியோ? குறைந்தோ? இருந்தால் அது நோய்  என்றும் அந்த ஆபத்தான நோய்க்கு எடுக்கக்கூடிய மருந்துகள் வாழ்நாளுக்கும் உண்ண வேண்டும் இல்லையேல் எவ்வளவு பெரிய இழப்பையும் சந்திக்க நேரிடலாம் என்று கூறுவதை பார்த்து வருகின்றோம்.

உடல் உழைப்பு ,உபாதைகள் இவை ஒவ்வொருவரின் உடல்வாகும் உயிர் உடல் வாகுக்கு ஏற்றவாறும் உயிர் ஆற்றலின் பாதிப்பு ஆகியவைகளுக்கு ஏற்ற ஏற்ப தான் ரத்த அழுத்தம் உட்பட அனைத்தும் ஒவ்வொருவருக்கும், வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

இல்லை, இல்லை எல்லாம் ஒரே அளவில் தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் அனைவரும் உணர்வற்ற உயிரற்ற பிணமாகி விடுவதை தவிர வேறு வழி இல்லை.

நொடிக்கும் குறைவான நேரம் கூட ஓய்வெடுக்காத இருதயம் எந்த தகவலும் இல்லாமல் தேவையும் இல்லாமல் தான்தோன்றித்தனமாகவோ தாறுமாறாகவோ இயங்குவதில்லை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் நமது உழைப்பிற்கும் இயக்கத்திற்கும் எவ்வளவு ஊட்டச்சத்து தேவை என்பதை இருதயத்திற்கு உணர்த்துகிறது‌ இருதயம். 

அவ்வுறுப்புக்கு தேவையான ஊட்டச்சத்தை ரத்தத்தின் மூலமாக அனுப்புகிறது இவ்வாறு 24 மணி நேரமும் ஒவ்வொரு உறுப்பும் தனது தேவையை இருதயத்திற்கு உணர்த்துகிறது அதை ஏற்று இருதயம் செயல்படுகிறது இதுவே ஓய்வில்லாத இருதய துடிப்பின் ரகசியமாகும்....
அதாவது ஒரு உறுப்பு அளவுக்கு அதிகமாக அல்லது முறைகேடாக அசதியாக இயங்காத வரை அதன் ஆரோக்கியம் கெடாதவரை அவ்விருவரும் உறுப்பிற்கு கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படுவதில்லை.

இந்நிலையில் இருதயம் ஒருக்காலும் அளவுக்கு அதிகமாக இயங்குவதில்லை. அதற்கு அதிகமான ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது, இந்நிலையில் இருதயம் சற்றே கூடுதலாக இயங்கி அதிகமான ஊட்டச்சத்தை அவ்வுறுப்பிற்கு அனுப்பி அவ்வுருப்பை பாதுகாக்க தவறுவதில்லை.

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).  


 



Post a Comment

0 Comments