படித்த ஆச்சரியமான சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ரத்த அழுத்தம்(பிளட் பிரஷர்.பிபி)
பிபி பிளட் பிரஷர் என்ற வார்த்தையை கேள்விப்படாதவரோ கேள்விப்பட்ட பின் பயப்படாதவரோ ஒருவரும் இல்லை என்பது தான் உண்மை மனிதகுல வரலாற்றில் பிபி என்ற வார்த்தை சிறிது காலத்திற்கு முன்னர் தான் பிரபலமானது சிறிது காலமாகத்தான் பிபி என்ற வார்த்தை அங்கங்கெனாத படி எங்கும் அடிபடுகிறது என்றால் பிபி என்பது என்ன அது கணிப்பொறி போல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவியா அல்லது யாரேனும் தலைவரின் தீவிரவாதியின் பெயரா அல்லது சினிமாவா மக்களுக்கு தொண்டாற்றும் கட்சியாய் இயக்கமா இல்லை புதிய மதமா இதில் எதுவுமே இல்லை என்றால் பிபி என்பது என்ன?.
சிறிது காலமாய் படித்தவர் பாமரர் ,ஏழை ,பணக்காரர், முதலாளி, தொழிலாளி ,அரசன், அடிமை என்று எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் எல்லோரையும் பயப்பட வைக்க கூடிய பிபி என்ற வார்த்தையின் உண்மை பொருள் என்ன?
முன்னேற்றத்தின் ஒட்டுமொத்த அவல நிலையின் வெளிப்பாடு தான் ரத்த அழுத்தம்,பெயர் சூட்டி வளர்த்த புதிய பிள்ளைகளில் ஒன்று மனித குலத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவும் மனிதன் நலத்தை மண்ணோடு மண்ணாகி தனது பொருளாதாரத்தையும் புகழையும் அதிகரித்துக் கொள்ள மருத்துவம் செய்த அப்பட்டமான சூழ்ச்சிகளில் சுகர் போல பிபியும் ஒன்று.
ரத்த அழுத்தம் என்பது ஒரு புதிய நோயின் பெயராம். அதாவது தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ,படபடப்பு, மூச்சிரைப்பு போன்ற நோய்கள் குறிகளை எல்லாம் ஒன்று சேர்த்து bp என்று பெயர் வைத்து அதை ஒரு புதிய நோயாக அறிமுகப்படுத்திவிட்டது. நமது மருத்துவத்துறையில் தலைவலி தலைசுற்றல் படபடப்பு போன்றவை முன்பு கிடையவே கிடையாதா இவை என்ன புதிய நோய்களா?
தலைவலி, தலைசுற்றல் ,மயக்கம், வியர்வை ,படபடப்பு போன்ற நோய்க் குறிகளை நிரந்தரமாக நீக்க நவீன துறையின் புதிதான பெயர்தான் பிபி.
பிளட் பிரஷர் அதாவது
இரத்த அழுத்தம்
என்றால் என்ன.
ஒரு வேப்ப மரத்தடியில் பாஸ்கரன் என்பவன் பேருந்துக்காக காத்திருக்கிறான். பேருந்தோ வழக்கப்படி தாமதமாக வந்து அவனை விட்டு சற்று தள்ளி நிற்கிறது. பேரூந்தை பிடிக்க அவன் தன் மூச்சை அடக்கி சக்தியெல்லாம் ஒன்று திரட்டி ஓடுகிறான். சிரமப்பட்டு பேருந்தில் ஏறி விட்டான். இப்போது அவனுக்கு வியர்த்து கொட்டுகிறது. லேசான தலை கிறுகிறப்பும் வலியும் ஏற்படுகிறது. மூச்சு வாங்குகிறது கண் வாங்குகிறது. காது அடைகிறது. நெஞ்ச படபடக்கிறது. கை கால்களோ உலைச்சலோ பிடிப்போம் உண்டாகிறது, இன்னும் சில தொந்தரவுகளும் செய்கிறது. இப்பொழுது பாஸ்கரனின் ரத்த அழுத்தத்தை பார்த்தால் அது அதிகமாகவே இருக்கும் என்பதில் எல்லோருக்கும் எள்ளளவும் சந்தேகமே இல்லை .
உதாரணமாகக் கொண்டு
என்ன ஆயிற்று என்பதை
பார்க்கலாம் .
எதிர்பார்த்து அமைதியாக காத்திருக்கும் பொழுது பாஸ்கரனுக்கு எந்த உபாதையும் இல்லை.ரத்த அழுத்தம் ஏறவும் இல்லை. அவனுக்கு பேருந்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி தன் சக்திக்கு மீறி மூச்சு அடக்கி ஓடினான். அப்போதுதான் அவனுக்கு சில உபாதைகளும் ரத்த அழுத்தமும் கூடியது. இவ்விரண்டுமே பாஸ்கரன் ஒரு நிமிடங்கள் ஓய்வெடுத்த பிறகு தானே போய்விடும். ஆக அமைதியான நிலையில் இருந்து அவசரமான நிலைக்கு பாஸ்கரன் தள்ளப்பட்டதால் அதாவது திடீரென்று வேகமாக ஓடியதால் அவனுடைய அந்த செயலுக்கு உடல் உழைப்பிற்கு தேவையான கூடுதல் ஊட்டச்சத்தை இருதயம் ரத்தத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு அனுப்புகிறது .அதாவது சூழ்நிலைக்கேற்றவாறு இருதயம் சற்றே அதிகமாக உழைக்கிறது. இப்போது அவனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது, அது அவசியமாகிறது.அதனால் தற்காலிகமாக ஒரு சில உபாதைகள் உண்டாகிறது.
இது இயற்கை பாஸ்கரன் மீண்டும் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு அதாவது ஓட்டத்தை சக்திக்கு மீறிய உழைப்பை நிறுத்திய போது சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து தேவையற்றதாகி விடுகிறது. இருதயம் இயல்பாகவே இயங்குகிறது. இப்போது பாஸ்கரனுக்கு எந்த வித உபாதையும் இல்லை. ரத்த அழுத்தம் ஏறவும் இல்லை, அவசிய பட்டால் இனி ஏறப்போவதும் இல்லை.
குறித்து அலசி ஆராயலாம் ரத்த அழுத்தம் அதிகமானதால் பாஸ்கரன் வேகமாக ஓடினானா? அல்லது அவன் வேகமாக ஓடியதால் ரத்த அழுத்தம் அதிகமானதா?. ஒருவன் ஓடும் போது ரத்த அழுத்தம் அவசியமானதா?. அல்லது ஆபத்தானதா? இதற்கான காரணம் என்ன என்பதை அடுத்த வாரம் நாம் பார்க்கலாம்.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments