
அதிகாலையில் தூக்கத்தை விட்டு எழுந்ததும், செரோக்கி வழமைபோல் இரு கைகளையும் தலைக்குமேலாக நீட்டி, நிமிர்த்தி உடம்பை முறுக்கிவிட்டுக் கொண்டான்! தலையை இடதும் வலதுமாகச் சுழற்றித் தன்னை ஆசுவதப்படுத்திக் கொண்டான்!
ரெங்க்மா ஒருக்களித்துத் துங்கிக்கொண்டிருக்க, செக்கோவ் அவளது மார்ப்பினை ஒன்று மாறி ஒன்றாக உரிஞ்சிக் கொண்டிருந்தான். உரிஞ்சுதலின் தாக்கம் அடிக்கடி அவளை 'ஆய்...ஊய்' என்று சிணுங்க வைத்தது. செக்கோவ் பிறந்த நாளிலிருந்து இந்த சிணுங்கல் செரோக்கியின் காதுகளைத் துவம்சம் செய்து கொண்டுதான் இருக்கின்றது!
எழுந்தவன் ஆரவாரமின்றித் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, குள்ளர்களின் நாணயக் கட்டிலிருந்து போதுமான அளவு தாள்களை உருவி எடுத்துத் தன் பைக்குள் சொறுவிக் கொண்டவனாக, செக்கோவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்ததும், ரெங்க்மா கெஞ்சல் சாடையில் அவனை உற்று நோக்கினாள்!
அந்த நோக்கலின் பொருளைப் புரிந்து கொண்ட செரோக்கி, அவளது நெற்றியிலும், இரு கன்னங்களிலும் முத்தமழை பொழிந்துவிட்டு மனையை விட்டும் வெளியேறினான்!
நண்பன் இர்வினைச் சந்திக்கச் செல்லும் செய்தியை அவன் இரவு தூங்கச் செல்லுமுன் ரெங்க்மாவிடத்தில் கூறி வைத்திருந்ததால், காலையில் அவன் ரெங்மாவிடம் எதுமே பேசவில்லை!!
தன் போக்கிண் இடையில் தாய் தந்தையர்களைக் கண்டு, நகருக்குச் சென்று வரும் செய்தியைக் கூறிவிட்டு,தொடர்ந்து நடந்தவன் குகையை ஒரு எட்டு எட்டினான்! யோகியார் தன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவன், அவரிடம் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடந்தான்!
மரவேர் வந்ததும் வழமைபோல் உடைகளை மாற்றிக்கொண்டு மைதானத்தைத் தாண்டி நகருக்குள் நுழைந்தவன், பொதுப்போக்குவரத்துப் பேரூந்து வரும் வரை காத்துநின்று இர்வினின் அலுவலகம் நெருங்கினான்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments