ஆசிய கோப்பை - 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான்.. நேபாளத்தை நொறுக்கிய பாபர் அசாம் படை

ஆசிய கோப்பை - 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான்.. நேபாளத்தை நொறுக்கிய பாபர் அசாம் படை


முல்தான் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
முல்தான் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் தொடக்க வீரர் ஃபக்கர் சாமான் 14 ரன்களிலும், இமாம் உல் ஹக் ஐந்து ரன்களிலும் ஆட்டம் இழக்க ரிஸ்வான் 44 ரன்களில் வெளியேறினார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் இப்திகார் அஹமத் ஐந்தாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சேர்த்தனர். இதில் இப்திகார் அஹமத் 71 பந்துகளில் 109 ரன்களை குவிக்க ,சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும்,ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பாகிஸ்தான அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. தொடக்கவீராக களமிறங்கிய ஆசிப் ஷேக் 5 ரன்களிலும், குஷல் 8 ரங்களிலும் கேப்டன் ரோகித் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து நேபாள் தடுமாறியது. ஆசிப் சேக் மற்றும் சோம்பால் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

எனினும் அவர்களுடைய பார்ட்னர்ஷிப்பும் விரைவில் பிரிந்தது. ஆரிப் சேக் 26 ரன்களிலும், சோம்பால் 28 ரன்களிலும் வெளியேற குல்சான் 13 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் என்ற நிலையில் இருந்த நேபாள் அணி அடுத்த 14 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சியுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் நேபாள் அணி 23.4 ஓவரில் 104 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் சதாப்கான் நான்கு விக்கெட்டுகளையும், ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற்றது.

Source:mykhel


 



Post a Comment

Previous Post Next Post