இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா.. மவுனம் காக்கும் மோடி அரசு!

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா.. மவுனம் காக்கும் மோடி அரசு!

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

 
கடந்த ஆண்டு கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஊடுருவ முயன்றது. இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்தாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்தது. ஆனால் சீன அரசிடம் இருந்து உரியத் தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சீனா பின்வாங்கிச் சென்றது.

இருந்தாலும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவி வருகிறது. அருணாசலப் பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து மோடி அரசு எவ்வித விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகிறது. அண்மையில் கூட ஒரு அங்குலம் இந்தியப் பகுதிகளைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் சொன்னார். இந்த பொய்யை மெய்ப் பிக்கும் வகையில் சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து புதிய வரைபடம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த வரைபடத்தில் ஆக்கிரமித்து இந்தியப் பகுதிகளை அக்ஷாசின் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனவும் இடம்பெறச் செய்து இருக்கிறது. இந்த வரைபடம் வெளியானதை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் இந்தியாவின் பிரிக்கக் கூடாத மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். தன்னிச்சையாகச் சீனா எந்த வரைபடத்தையும் மாற்ற முடியாது.

இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாடு, உலக அரங்கில் இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல்களை அம்பலப்படுத்த நமக்கு மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். LAC யில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியில் சட்டவிரோதமாகச் சீன ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவதை மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Source:kalaignarseithigal


 



Post a Comment

Previous Post Next Post