
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யாவின் லூனா - 25 விண்கலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்த லூனா - 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால் இன்று (ஆக்ஸ்ட் 20 ) அதிகாலை லூனா - 25 -இல் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், தற்போது நிலவில் லூனா - 25 விண்கலம் மோதி நொருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், நிலவில் தரையிறக்குவதற்கு விண்கலத்தை நகர்த்துபோது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக லூனா - 25 நிலவில் மோதியதாக தெரிவித்துள்ளனர்.
SOURCE:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments