
இந்தியா விண்வெளித் தொழில் நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதற்கும், அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்து வதற்குமாகவும் 1969ல் "ISRO" தேசிய விண்வெளி முகாம் ஒன்றை பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு நிறுவியது.

உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவது இடத்திலுள்ள ISRO, 41 பில்லியன் ரூபாய்கள் கொண்டு செயற்பட்டுவரும் இந்நிறுவனத்தில் 16,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்திய அரசின் விண்வெளித்துறை நேரடி மேற்பார்வையாளராக திருவாளர் சோம்நாத் செயல்பட்டு வருகின்றார்.

ஆரம்பகாலமுதல் தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ள ISRO,1975ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தனது முதல் செயற்கைக் கோளான"ஆரியபட்டா"வை சோவியத் நாடுகளின் உதவியுடன் விண்ணேற்றியது.
1980ல் முற்றுமுழுவதும் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் SLV-3 மூலமாக "ரோகிணி"யை விண்ணேற்றியது.
தொடர்ந்து செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க துணக்கோளான PSLV, மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க செயற்கைக்கோள் ஏவுகலமான GSLV போன்ற இரு ஏவுகலங்களையும் வடிவமைத்துக் காட்டியது.
இதுவரை பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவிகூர் நோக்கு செயற்கைக் கோள்களையும் ISRO ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது பல்வேறு பணிகளுக்குமான ஆய்வு மையங்களை நாடெங்கும் ஆங்காங்கே நிறுவியுள்ள இஸ்ரோ,2008ம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1ஐ ஏவியமை குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3 திட்டம்: வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர் விக்ரம்/image;news18
சந்திரயான்-3 என்பது நிலவுப்பயணத் திட்ட நிரலில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ள மூன்றாவது அண்மைக்கால நிலாத்தேடல் திட்டமாகும்.
சந்திரயான்-3 விண்கலத்தில், தரையிறங்கி, ஊர்திக்கலம் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. தரையிறங்கிக்குள்தான் ஊர்திக்கலமும் அமைந்துள்ளது. தரையிறங்கி கலத்தை "விக்ரம்" என்றும், ஊர்திக்கலதை "பிரக்யா" என்றும் அழைக்கிறார்கள்.
தரையிறங்கி, தரைஊர்தியைக் கொண்ட செலுத்துகலத்தை 100 கி.மீ. தொலைவில் நிலா அண்மைக்குக் கொண்டு சென்று விடுவது இத்திட்டத்தின் முதல் முயற்சியாகும்.
ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து 2019, ஜூலை 22ம் திகதியன்று நிலவை நோக்கி ஏவப்பட்ட ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் சந்திரயான்-2,2019, செப்டம்பர் 7ல் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும்,திட்டமிடப்பட்ட வழித்தடத்திலிருந்து விலகியதால், நிலாத்தரையில் தரையிறங்கியை வெற்றிகரமாக இறக்கிக்கொள்ள முடியாமற் போய்விட்டது.

நிலவின் புகைப்படம்/image/news18
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காகப் புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிலவை நெருங்கிவிட்ட நிலையில், சுற்றுவட்ட பாதையில் கடைசி முறையாக உயரம் குறைக்கப்பட்டு, விண்கலத்திலிருந்து பிரிந்துவிட்டதால், திட்டம் தற்போது முக்கிய கட்டத்துக்கு வந்துவிட்டது.
சந்திரயான்-2 மூலம், ISRO பெற்ற பழுதுகள் சம்பந்தமான பகுப்பாய்வு அறிக்கையின்படி, முன்னைய தவறுகள் சீர்செய்யப்பட்டு, 2023ல் சந்திரயான்-3 மூலமாக நிலாதரையிறக்கத்துக்கு மறுமுயற்சி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தரையிறங்கும் நிகழ்வு, 2023 ஆகஸ்ட் மாதம் 23ம் திகதியன்று மாலை 5:45 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் இறுதிக்கட்டமாக, உந்துகலத்தினுள் இருக்கும் தரையிறங்கி ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரைக்குத் தள்ளும். "விக்ரம்" என்ற தரையிறங்கி நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.
அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு, நிலவின் தரையில் தடம் பதிக்கும் "பிரக்யா" என்ற ஊர்திக்கலம் அதன் பின்னரே தனது அடுத்தகட்ட ஆய்வு வேலைகளைத் தொடங்ககாம் என்று எதிர்பர்க்கப் படுகின்றது.
இதன் முக்கிய குறிக்கோள் நிலவின் மேற்பரப்பு உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வு செய்து படமெடுப்பதும், நிலவில் தண்ணீர் செறிவாக உள்ள இடங்களைக் கண்டறிதலுமாகும்.
அத்துடன், லேண்டரில் உள்ள கிடைமட்ட வேகக் கெமரா மூலம் சந்திரயான் 3 விண்கலம் கடந்த 9ம் திகதி, 4,400 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அண்மையில் இஸ்ரோ வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திட்டமும் குறிக்கோளும் வெற்றிகரமாக அமைய நல்வாழ்த்துக்கள்.
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments