
குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னிம்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
என்னமோ இந்த
அனிச்சம்பூதான்
மென்மையா இருக்குதாம்.
சொல்லிக்கிறாங்க!
இருக்கட்டுமே!
ஆனா என்மகளோட
மென்மைக்கு முன்னால
இந்தப் பூவெல்லாம்
தலகுனிஞ்சு நிக்கணுமாக்கும்!
தெரிஞ்சுக்குங்க!
குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே
இவள்கண் பலர்காணும்
பூவொக்கும் என்று மனமே!
நம்குழந்தையின்
கண்களைப் பார்த்து
மற்ற மலர்களைப்போல
இருக்கும் என்று அந்த
மலர்களைப் பார்த்து
மயங்குகிறாயே!
சரியா?&
குழந்தையே அழகு
குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல்
வெறிநாற்றம் வேல்
உண்கண் வேய்த்தோள் அவட்கு.
நாம நெனச்சமாதிரி
ஒருபெண்குழந்த
பெறந்துருச்சுங்க!
அவ வளரவளர
தோள் மூங்கில்போல இருக்கும்!
உடம்பு தளிர்போல மென்மை!
பல்லெல்லாம் முத்துக்கள்தான்!
உடம்புல இயற்கையான
மணம்வீசும்! கண்களுக்கு
மைபோட்டுப் பாத்தா
வேல்போல தோற்றம்
இருக்கும்!
பாருங்க.
குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து
நிலன்நோக்கும் மாணிழை
கண்ணொவ்வேம் என்று.
அப்பா!
நாம் உங்க
குட்டிப் பேத்தியும்
வயல் வெளிப்பக்கம்
நேத்து சாயந்திரம்
நடந்து போனோம்!
குவளைப் பூவெல்லாம்
வெட்கத்தோட நெலத்தப்பாத்து
குனிஞ்சிக்கிருச்சு!
என்னடான் பாத்தா
உங்கபேத்தியோட
கண்களைப்போல
அவை இல்லையாம்!
என்னஅழகு பாத்தீங்களா?
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments