31 வயதில் கருவுற்று 92 வயதில் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி - எங்கு தெரியுமா?

31 வயதில் கருவுற்று 92 வயதில் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி - எங்கு தெரியுமா?


உண்மையில் இதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். சீனாவைச் சேர்ந்த 92 வயது முதிய பெண்மணிக்கு “கல்குழந்தை” (Stone baby) ஒன்று பிறந்துள்ளது.  

மருத்துவ மொழியில் இதனை லித்தோபீடியான் (lithopedion) என அழைக்கிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 60 வருடங்களாக இந்த கருவை தனது வயிற்றுக்குள் சுமந்து வந்திருக்கிறார் மூதாட்டி. இவரின் முழு கதையும் தெரிந்துகொள்ள நாம் கொஞ்ச காலம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1948-ம் வருடம். ஹூவாங் யூஜினுக்கு அப்போது 31 வயது. தான் கர்ப்பமாகவுள்ளோம் என மகிழ்ச்சியடைந்தாலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இது எக்டோபிக் கர்ப்பம் என மருத்துவர்கள் கூறினர். அப்படியென்றால், கருவுற்ற முட்டையானது கர்ப்பபைக்கு வெளியே வளர்வதையே இப்படி கூறுகிறார்கள்.

வழக்கமாக கரு முட்டையானது கருக்குழாயின் உள்ளே பொருந்தியிருக்கும். ஆனால் இவருக்கோ வெளியே வளர்ந்து வந்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் வளர்ந்து வரும் கருவானது அடிவயிற்றில் உள்ள பல்வேறு உறுப்புகளோடு இணைந்திருக்கும். சில சமயங்களில் கல்லீரல், குடல்களில் கூட இணைந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி அடிவயிற்றில் உள்ள கரு இறப்பதில்லை என்றாலும், கருவுற்ற தாயிற்கும் அந்த குழந்தைக்கும் ஆபத்துள்ளதை மறுக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறக்க 21% வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்

துரதிஷ்டவசமாக ஹூவாங்கின் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. வழக்கமாக கரு சிறியதாக இருக்கும் போதே, நம்முடை உடல் அதன் திசுக்களை உடைத்து வெளியேற்றிவிடும். ஆனால் ஹூவாங்கின் அடிவயிற்றில் உள்ள கருவானது, பெரிதாக வளர்ந்துவிட்டதால் உடலால் தானாக வெளியேற்ற முடியவில்லை.

இந்த கருவை அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றிவிடலாம், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர். அந்த சமயத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்ய ரூ.12,500 தேவைப்பட்டுள்ளது. அவ்வளவு பணம் அவரிடம் இல்லாத காரணத்தால், எந்த அறுவை சிகிச்சையும் அவர் செய்து கொள்ளவில்லை. கருவும் அவர் வயிற்றுக்குள் அப்படியே இருந்துள்ளது.

இதுபோன்ற கருவை உடல் தானாக வெளியேற்ற முடியாமல் போகும் போது, இறந்த திசுக்களைச் சுற்றிலும் கால்சியம் தேங்கிவிடுகிறது. இதன் காரணமாக அது “கல் குழந்தையாக” மாறிவிடுகிறது. இப்படி உருமாற்றம் வயிற்றுக்குள் நடக்கும் போது, அந்த தாயிற்கு எந்த அறிகுறிகளும் ஏற்படாது.

இதற்கு முன்பு பலருக்கும் இதுபோல் “கல் குழந்தை” பிறந்தபோதும், அவர்கள் சராசரியாக 22 வருடங்கள் இந்த கருவை தங்கள் வயிற்றில் சுமந்துள்ளார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், வயிற்றில் கல் குழந்தை இருக்கும் போதும் கூட சில பெண்களுக்கு நல்ல விதமாக வேறு குழந்தைகளும் பிறந்துள்ளது.

ஆனால் ஹூவாங்கிற்கு நடந்தது கொஞ்சம் வித்தியாசமானது. அவருக்கு தன் வயிற்றில் கல் குழந்தை இருக்கிறது நன்றாக தெரியும். ஆனால் அவரால் அந்த சமயத்தில் அகற்ற முடியவில்லை. ஒரு வழியாக, 2009-ம் ஆண்டு, அவருக்கு 92 வயதாக இருக்கும் போது, 60 வருடங்களாக வயிற்றுக்குள் சுமந்து வந்த கருவை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post