ஒர்க் அவுட் செய்யாமலேயே செயற்கையான முறையில் ரஷ்ய இளைஞர் ஒருவர் கை தசையான பைசெப்ஸை வளர்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிரபல கார்ட்டூன் கேரக்டரான பாப்பே (Popeye) போன்று இவர் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் கிரில் தெரிஷின். 26 வயதாகும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
புதுமையாக எதையாவது செய்து மக்களின் கவனத்தை பெற வேண்டும் என்பதுதான் இவரது பிரதான நோக்கம். முன்பு இவர் பெட்ரோலியம் ஜெல்லியை தனது பைசெப்ஸ் தசையில் செலுத்தி அதை பெரிதாக்கியுள்ளார். அழகான பெண்களை கவர்வதற்காக இப்படி செய்தேன் என்று கூறுகிறார் தெரிஷின்.
இப்படி பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தியதால் பைசெப்ஸ் தசைகளில் ரத்த ஓட்டம் தடைபட்டு முன்பு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரிஸ்க் எடுத்து பைசெப்ஸ் தசையை அதிகப்படுத்தியுள்ளார் தெரிஷின். முன்பு காய்கறி எண்ணெயை உடலில் செலுத்தி பைசெப்சை பெரிதாக்கிய இவர், தற்போது வாஸ்லின் ஜெல்லியை உள்ளே செலுத்தி தசையை பெரிதாக்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இருப்பினும், உடற்பயிற்சியை நன்றாக அறிந்த பயனர்கள், அவரை சரமாரியாக கிண்டலடித்து வருகின்றனர்.
SOURCE:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்