Ticker

6/recent/ticker-posts

புர்ஜ் கலீஃபாவில் 3 நிமிட விளம்பரம் செய்ய எவ்வளவு கோடி செலவாகும் தெரியுமா?


புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.

துபாயில் வானளாவிய உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இந்த கட்டடத்தில் நிறைய வர்த்தக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் இருக்கின்றன. எனவே, தங்கள் நிறுவனம் தொடர்பான விஷயங்கள் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க விரும்பும் நிறுவனங்கள் இந்த புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்கின்றன.

இந்த கட்டடத்தில் விளம்பரம் செய்ய பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும். தங்களது விளம்பரத்தை பேசுபொருளாக்க வேண்டும் என்று நினைக்கும் பலர், இந்த புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருந்தபோது, புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ’செம்மொழியான தமிழ் மொழியே’ பாடல் விளம்பரம் செய்யப்பட்டது. அதேபோல், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் காட்சிகளும் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். ஏனெனில், எவ்வளவு நேரம் விளம்பரம் ஓடுகிறது, எப்போது ஓடுகிறது என்பதை பொறுத்து தொகை மாறுபடும். இருப்பினும், 3 நிமிடம் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய தோராயமாக 68,000 டாலர் செலவழிக்க வேண்டும்.

அதாவது, இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம். வார இறுதி நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை விளம்பரத்தை வெளியிட நினைத்தால், 95,000 டாலர் அதாவது, ரூ.80 லட்சம் கொடுக்க வேண்டும். வார இறுதி நாட்களில் நள்ளிரவில் விளம்பரத்தை வெளியிட ரூ.2.27 கோடி வரை கட்டணம் இருக்கும்.

எனவே, பணம் இருந்தால் போதும் திரைப்படங்கள், அரசு திட்டங்கள் மட்டுமின்றி, உங்கள் பிறந்தநாள், திருமண நாள் குறித்த விளம்பரத்தையும் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வெளியிடலாம்.

news18


 


Post a Comment

0 Comments