Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி-33

மனிதன் என்பவன் இயந்திரபூர்வமானவன் அல்ல... இயற்கையில் மனிதன் என்பவன் அறிவு பூர்வமானவன், உயிரோட்டமானவன் . உயிர் இல்லையேல் அவனை பிணம் என்றுதான் நாம் சொல்வோம்.... எதற்காக நான் இவ்வாறு சொல்கிறேன் என்றால் இயந்திரத்தின் ஒரு பகுதி செயலிழந்து விட்டால் அந்த ஒரு பகுதியை மாத்திரம் சரி செய்து விட்டால் போதுமானது. ஆனால் மனிதனுடைய உடலில் உள்ள உறுப்புகளும் செயலிழக்கும் போது மொத்த உடலும் நோய்வாய்ப்படும் . 


எனவேதான் மனிதன் என்பவன் இயந்திரம் அல்ல.

எதற்காக இந்த முன்னுரை? ஆம் காரணம் உண்டு.மனிதனை உருவாக்க பல உறுப்புகளை ஒன்றிணைத்து விட்டால் மனிதனை உருவாக்கி விட முடியுமா நிச்சயமாக முடியாது.. ஆனால் இயந்திரங்களை வெவ்வேறு பாகங்களை வாங்கி ஒன்றிணைத்து முழு இயந்திரமாக உருவாக்கி விட முடியும்.


இதன் காரணமாகத்தான்  மனிதன் நோய்வாய்ப்படும்பொழுது ஒரு உறுப்பை மட்டும் நலமாக்க முயல்வது முட்டாள்தனம் மேலும் அது முடியாதது மேலும் அதனால்  நோய் நிவாரணம் கிடைக்காது.


ஒரு மனிதன் நோய் வாய்ப்பட்ட நிலையில் ஒரு பகுதியோ ஒரு உறுப்பையோ கவனிப்பதால் உண்மையில் பாதிக்கப்பட்ட அம்மனிதனின் உயிராற்றல் பாதிக்கப்பட்ட படியே இருப்பதால் அது வேறொரு பகுதியையோ உறுப்பையோ தாக்க துவங்கி விடுகிறது.மேலும் கிருமிகளால் தான் நோய்கள் வருகின்றது என்பது தவறான கருத்தாகும்.


நோய்களால் தான் கிருமிகள் உருவாகின்றது


உடலில் ஏற்படும் நோய் என்பது கெட்ட உணவு சக்தி அதை உண்டு வாழ வளர கெட்ட கிருமிகள் அதிலிருந்து உற்பத்தியாகிறது, அல்லது வெளியில் இருந்து வருகின்றது உடலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிப்பதால் மீண்டும் மீண்டும் நோய் கிருமிகள் தோன்றவே செய்யும் மாறாக கெட்ட உணவு சக்தியை அகற்றுவதோ, அல்லது அதை நல்ல சக்தியாக மாற்றுவதோ தான் நிரந்தரமாக நோய் நீக்கும் சிகிச்சை முறையாக இருக்க முடியும். எவ்வாறு கிருமிகள் நோய்கள் இல்லையோ நோய்களை தோற்றுவிப்பதில்லையோ அவ்வாறுதான் நீரிழிவு என்பதும் நோய் கிடையாது அது நோயை தோற்றுவிப்பதும் இல்லை நீரழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் என்பது கிருமி தங்கி தாக்குவதற்கான சூழ்நிலை அந்த மனிதரிடம் உள்ளது என்பதே இதன் சரியான பொருளாகும்.


என்ன வேட்டை வாசகர்களே சரியாக புரியவில்லையா நான் உங்களிடம் நீரிழிவு நோயை பற்றிய தவறான கருத்தை நீக்க முயற்சி செய்கிறேன் என்னால் முடிந்தவரை....!


மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu). 



 



Post a Comment

0 Comments