Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்


ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து 10-ஆவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 7,05,809 ஆக பதிவாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த வீழ்ச்சி, தேசிய மக்கள் தொகை, சமூக பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கணித்த காலத்தை விட 17 ஆண்டுகள் முன்பே நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானில் தொழிலாளர் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அதே காலகட்டத்தில் மரணங்கள் சுமார் 16 இலட்சமாக பதிவாகி, பிறப்புகளை விட இரட்டிப்பை எட்டியுள்ளது. திருமணப் பதிவுகள் 5,05,656 ஜோடிகளாகவே இருந்து, சிறிய உயர்வை மட்டும் காட்டின.

பிரதமர் சனே தக்காய்சி தலைமையிலான அரசு, குழந்தை பராமரிப்பு சேவைகளுக்கு வரி சலுகை, வேலை இடங்களில் பாலர் பராமரிப்பு மையங்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட புதிய நடவடிக்கைகளை செய்து வருகிறது. 

ஆண்டுக்கு 3.6 டிரில்லியன் யென் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், கர்ப்ப பரிசோதனை, பிரசவச் செலவுகளை இலவசமாக்கும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில் நாட்டுக்குள் மட்டும் பதிவான பிறப்புகள் 6,86,000 ஆக இருந்து, 1899-க்கு பின் மிகக் குறைந்த அளவாகும். பொருளாதார நிபுணர்கள், வெளிநாட்டு குடியேற்றத்தை தேசியத் திட்டமாக இணைக்காவிட்டால், நீண்ட காலத்தில் வளர்ச்சியும் போட்டித்திறனும் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர்.

nambikkai

 


Post a Comment

0 Comments