பூமியை நோக்கி படையெடுக்கும் 5 விண்கற்கள்.. புவியை பாதிக்குமா? நாசா சொல்லும் விளக்கம்

பூமியை நோக்கி படையெடுக்கும் 5 விண்கற்கள்.. புவியை பாதிக்குமா? நாசா சொல்லும் விளக்கம்


இந்த பிரபஞ்சத்தில் இந்த சூரிய குடும்பத்தைப் போல பல லட்சம் நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரபஞ்சப் பொருளும் அதன் சொந்த ஈர்ப்பில் இந்த அண்டத்தில் உலவி வருகிறது. அதில் கோள்கள், நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள், விண்துகள்கள் என்று பலவகைகள் உண்டு.

அவ்வப்போது இதில் சில  பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இது ஒரு சில நேரங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் உராய்வுகளோடு முடிந்துவிடும். பூமியின் வலராற்றிலும் இப்படியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. அதே போல தற்போது 2 நாட்களில்  பூமியை 5 விண்கற்கள் நெருங்கும்  செய்திகள் வந்துள்ளன. அவற்றின் விபரங்களைத் தான் சொல்ல இருக்கிறோம்.

சிறகோள் 2007 RR17: NASA JPL ஆல் கவனிக்கப்பட்ட இந்த சிறுகோள் இன்று ஆகஸ்ட் 26 அன்று பூமியை நெருங்கியுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இந்த சிறுகோளின் அளவு 200 அடி. இது மணிக்கு 25672 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் இது பூமிக்கு 199 மில்லியன் கி மீ தொலைவில் நெருங்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் அளவிலான சிறுகோள் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளனர்.

சிறுகோள் 2023 QT1 : நாசாவின் கூற்றுப்படி, இது இன்று பூமியை நெருங்கும் . தோராயமாக ஒரு விமானத்தில் 2/5 அளவு கொண்ட இந்த  சிறுகோள் அதன்  சுமார் 100 அடி பரப்பு கொண்டது. இது மணிக்கு 38281 கிமீ வேகத்தில் பூமியை நெருங்குகிறது. அதோடு  இது 2 74 மில்லியன் கிமீ தொலைவில் பூமியை நெருங்குவைத்தால் இதனாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சிறுகோள் 2023 QR1:  இது பேருந்து அளவிலான சிறுகோள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஆகஸ்ட் 27  பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோளின் அளவு சுமார் 40 அடி. இது 1.03 மில்லியன் கிமீ தொலைவில் நமது கிரகத்தை நெருங்கும். அனால் இது அளவில் மிக சிறியது மற்றும் தூரம் அதிகம் என்பதால் இதுவும் பூமியை ஒன்றும் செய்துவிடாது.

சிறுகோள் 2023 QJ5: இந்த சிறுகோள் ஆகஸ்ட் 27 அன்று மணிக்கு 43822 கிமீ வேகத்தில் பூமிக்கு அருகில் வரும். இந்த சிறுகோள் 108 மில்லியன் கிமீ தொலைவில் பூமியை நெருங்கும். இந்த சிறுகோளின் அளவு சுமார் 43 அடி இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

சிறுகோள் 2023 QQ இந்த சிறுகோளும்  ஆகஸ்ட் 27 ஆம் தேதி பூமியை நோக்கி வர வாய்ப்புள்ளது. 79 அடி பரப்பு கொண்ட இந்த சிறுகோள்  மணிக்கு 36371 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி நகரும். இது பூமிக்கு மிக அருகில் 2.54 கிமீ தொலைவில் இருக்கும் அதன் சிறிய அளவு காரணமாக இந்த சிறுகோள் நமது கிரகத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.

SOURCE:news18


 



Post a Comment

Previous Post Next Post