
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 600 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட முதல் நட்சத்திரம் என்ற பெருமையை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
இது அவரது புகழின் உச்சத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக விளையாட்டு துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டுப் போட்டியாக கால்பந்தாட்டம் இருந்து வருகிறது.
கால்பந்தாட்ட வீரர்களுக்கு சர்வதேச அளவில் இருக்கும் வரவேற்பிற்கும், புகழுக்கும் இணையாக மற்ற துறை வீரர்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை. இந்திய அளவில் கிரிக்கெட் வீரர்கள் கொண்டாடப்பட்டாலும் உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களுக்கே மவுசு அதிகம் காணப்படுகிறது. சமீப காலத்தில் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, இறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே ஆகியோருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள்.
இதேபோன்று போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 600 மில்லியனை (60 கோடியை) தாண்டியுள்ளது. இந்த அளவுக்கு பின் தொடர்வோர் எண்ணிக்கை மற்ற எந்த பிரபலத்திற்கும் கிடையாது.
இந்த வரிசையில் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு 482 மில்லியன் ஃபாலோயர்களும், அமெரிக்க பாடகி செலினா கோமசுக்கு 427 மில்லியன் ஃபாலோயர்சும் உள்ளனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்தாட்ட அணியான அல் நஸ்ரில் இணைந்து விளையாடி வருகிறார். ரொனால்டோவுக்காக அல் நஸ்ர் அணியின் சமூக வலை தளங்களை பின்பற்றுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
SOURCE:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments