Ticker

6/recent/ticker-posts

வேட்டை இதழுக்கு வாழ்த்து;மக்கள் தொண்டில் 7 ஆண்டுகள் நிறைவு 8 ஆவது ஆண்டு தொடக்கம்!


ஏழாண்டு தன்னை நிறைவுசெய்து எட்டிலே
பீடுநடை போடுகின்ற வேட்டை இதழ்தன்னை
நாடுபோற்ற பார்போற்ற வாழ்த்துகிறேன் வாழியவே!
ஈடற்ற நற்றமிழால் வாழ்த்து. 

பாவலர்கள் ஓவியர்கள் பல்வேறு நாடுகளின்
ஆவலைத் தூண்டுகின்ற செய்திகள் என்றேதான்
காய்தல் உவத்தலின்றி சாதிமதம் பாராமல்
தூயமனம் கொண்டேதான் காலிட் அவர்களோ
நேயமுடன் தொண்டாற்றும் பண்பினை வாழ்த்துவோம்!
ஞாலப் புகழ்பெறவே வாழ்த்து.

AI RZANA NEWS READER
செயற்கைத் தொழில்நுட்ப நுண்ணறிவால் செய்திக்
களத்திலே வாசிக்கும் ஆற்றலை வேட்டை
பயன்படுத்திக் காட்டியதை வாழ்த்து.

இலங்கை தமிழ்நாடு செய்திகளைப் போல
பலநாட்டுச் செய்திகளை மக்கள் அறிய
களமமைத்து வாய்ப்பளிக்கும் வேட்டை இதழை
உளம்மகிழ வாழ்த்துகிறேன் நான்.

எட்டாண்டை மட்டுமல்ல நூற்றாண்டைக் கண்டேதான்
வெற்றிநடை போடவேண்டும்! பார்புகழ வாழ்த்துவோம்!
கற்றுத் தெளிந்தேதான் யாதுமிங்கே ஊரென்றும்
சுற்றமெல்லாம் மக்களே யாவரும் கேளிரென்ற
மக்கள் மனமெல்லாம் வாழவேண்டும் எந்நாளும்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா


 



Post a Comment

0 Comments