
வரலாற்றில் "குட்டித்தமிழகம்" என்று தடம் பதித்துள்ள கல்ஹின்னையானது, கவிமணி M.C.M. ஸுபைர் அவர்களின் "மணிக்குரல்" சஞ்சிகை மூலம் தமிழ் வளர்த்த கிராமமாகும்!

கல்ஹின்னையின் "அலவத்தை" என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.எச்.எம்.நயீம் என்ற தனியொருவரால் "வேட்டை" மின்னிதழ் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் சிறந்த பல எழுத்தாளர்களின் ஆக்கங்களைச் சுமந்து வருகின்ற இச்சஞ்சிகை, கல்ஹின்னைக் கிராமத்தில் ஆங்காங்கே நடக்கும் விரும்பத்தகாதவற்றைத் தட்டிக்கேட்டும், நல்லனவற்றைத் தட்டிக்கொடுத்தும் வருவத்தில் எப்போதுமே பின்வாங்காத ஒரு மின்-சஞ்சிகையாக இன்றுவரை இருந்து வருகின்றது; இனிமேலும் "வேட்டை" சிறப்புற வளர்ந்துவர நல்லாசிகள்!
கல்ஹின்னை வாழ் மக்களால் "அலவத்தை அப்பச்சி" என அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர், கல்ஹின்னைக் கிராமத்தில் ஆரம்ப காலத்தில் குடியேறிய நான்கு குடும்பங்களுள் ஒன்றான 'வாப்புக்கண்டு'வின் பேரன்மார்களுள் ஒருவராவார்; இவரது மகனான ஹபீபு முஹம்மதுவின் மகன் ஷாஹுல் ஹமீத் ஆவார். S.H M. நயீம் அவர்களின் தந்தையான இவர், 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிறந்து, 1958ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது!
1815ல் பத்து வயதாக இருந்த அலவத்தை அப்பச்சி, ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றியது சம்பந்தமான நிகழ்வுகள் தமக்கு நினைவிலிருப்பதாக, கல்ஹின்னையின் மூத்த மார்க்க அறிஞர்களுள் ஒருவரான மௌலவி ஷரீப் ஆலிம் அவர்களிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளதை "எங்கள் ஊர் கல்ஹின்னை" என்ற வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது!
கல்ஹின்னையின் பாடசாலை, பள்ளிவாயில், கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான பாதை போன்றவற்றின் அபிவிருத்திப் பணிகளில் அதிகரிசனை காட்டிவந்துள்ள காலஞ்சென்ற எஸ்.எச்.ஜுனைதீன் மற்றும் ஆசிரியர் எஸ்.எச்.தாஜுதீன் ஆகியோர்களின் இளைய சகோதரரான S.H.M. நயீம், கவிமணி எம்.ஸி.எம். சுபைர் அவர்களின் இலக்கியப் பாசறையில் வளர்ந்தவருமாவார்.
தனது இளமைப் பிராயமுதல் பத்திரிகைகளுக்கு எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்த இவர், 1980களில் மாதாந்த சஞ்சிகை ஒன்றை அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளார். சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் இடம்பெற்று வந்துள்ளன.
தான் ஆரம்பித்து வைத்த "வேட்டை"யை எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக முன்னெடுத்துச் செல்லத் திடம் பூண்டுள்ள நயீம் அவர்களுக்கு எனது நல்லாசிகள்.
M.H.M.NIYAS
Chairman
Media Link
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments