Ticker

6/recent/ticker-posts

வாழ்த்துக் கவி; வேட்டை யின்ஈ"டில்லா மின்னிதழ் பயணம்!

 
"அ"கிலத்தின் நாயகன் 
படைத்தவன் பேரருலால்

"ஆ"ற்றல்மிகு ஊடகச் 
சிறகுவிரித்த பயணத்தில் 

"இ"யந்திரப் பெண்ணையும் 
தன் வசமாக்கிக் கொண்டு

 
"ஈ"டில்லா மின்னிதழ் பயணம் 
ஏற்ற வேட்டை இதழ் 

"உ"வப்புடனே எட்டாமாண்டில் 
உலாவரப் பயணிக்கிறது

"ஊ"டகத் துறையில் 
வேட்டையின் பணி 
சிறந்திட உளமார வாழ்த்துகிறேன்!!

"எ"ட்டுத்திசையும் வேட்டையின் 
நற்பணி மணம் பரவட்டும்!!

"ஏ"ற்றமுடன் வேட்டையின் 
அறப்பணி தொடரட்டும்!!

"ஐ"யமின்றி நானுரைப்பேன்! 
நல்லோர் வாழ்த்துரைப்பர்!!
வேட்டையே நீ வாழ்க!!

"ஒ"வ்வொரு வாரமும் 
நற்கருத்துகளால் புகழ்பரப்பி 

"ஓ"ங்குபுகழ் பெறுமே!! 
ஊடகவழி வேட்டை தம்பணியால்         

"ஔ"வைபோல் தம்அறிவுச் சுடர் பரப்பி 
வையம் பாலித்திட வேட்டையின் பணி 
பல்லாண்டு காலம் தொடரட்டும்!!

"ஃ"தே எம்முடைய வாழ்த்தாக 
உரைத்து மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்..!!

அன்புடன்.,
குறளாசான்,தமிழ்ச்செம்மல், முனைவர் 
மு.க.அன்வர் பாட்சா 
நிறுவனர்/ தலைவர்,        
திருக்குறள் ஆய்வுக் கழகம்., 
கோயம்புத்தூர்  


 



Post a Comment

0 Comments