Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -175


அப்பொழுதுதான் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்த இர்வின், லிப்டினுள் செரோக்கியைக் கண்டதும் சந்தோசப்பட்டான்!

 
செக்கொவ் கிடைத்த மறுநாள் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது சந்தித்த செரோக்கியை நீண்ட நாட்களின் பின் அவன் இன்றுதான் சந்திக்கின்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி லிப்டை விட்டும் வெளியேறி, அலுவலகத்தை அடைந்ததும், இர்வினின் பையிலிருந்த 'செல்போன்' அலறியது. சிறு பெட்டி ஒன்றை எடுத்து கூரான ஒன்றை வெளியில் இழுத்துவிட்டு, அந்தப் பெட்டியைக் காதில் வைத்து இர்வின் பேசிக் கொண்டிருந்ததை செரோக்கி ஆச்சரியமாகப் பார்த்தான்!

"என்னையா இங்கு நடக்கிறது? சிறியதொரு  பெட்டி இசைக்கிறது. அதனுடன் நீ எதையெதையோ பேசுகிறாய்?"

"நண்பா இது பெட்டியல்ல... செல்போன்; கிட்டடியில்தான் பாவனக்கு வந்தது. பெட்டியுடன் நான் பேசவில்லை; என் குட்டியுடன் பேசினேன்" என்று இர்வின் சிலேடை வசனம் பேசியதும் செரோக்கி விக்கித்து நின்றான்!

'நான் பெட்டியென்றால்... அவன் குட்டி என்கின்றான். இவனுக்கு என்னதான் நடந்து விட்டது?' செரோக்கி யோசிக்கலானான்.

"எனக்கு எதுவுமே புரியவில்லை நண்பா...கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லேன்!"

"சொல்றேன்.. கேட்டுக்கோ.. " என்று கூறிவிட்டு, மேசை மீதிருந்த செல்போனைக் கையிலெடுத்து,

"இது ஒரு தொலை தொடர்புக் கருவி; இதனுடன் பேசினால் அது நாம் அழைத்தவரைச் சென்றடையும். அங்கிருந்து பேசுவதை இங்கு எம்மால் கேட்க முடியும். மிக அண்மையில்தான் இது பாவனைக்கு வந்தது. நான் இப்போது பேசியது தூரத்திலிருக்கும் எனது நண்பியிடம்; அதுதான் என் காதலியிடம்!"

(தொடரும்)


 



Post a Comment

0 Comments