நான் செஞ்சதுக்கு வெட்கப்படவேயில்லை - முஸ்லீம் மாணவனை அடிக்க கூறிய ஆசிரியை விளக்கம்!

நான் செஞ்சதுக்கு வெட்கப்படவேயில்லை - முஸ்லீம் மாணவனை அடிக்க கூறிய ஆசிரியை விளக்கம்!


எனது செயலுக்கு நான் வருத்தப்படவில்லை என ஆசிரியை தெரிவித்துள்ளார். 

ஆசிரையை செயல் 

உத்தரப்பிரதேசம், சாபர்நகர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில், 2ஆம் வகுப்பு படித்துவந்த இஸ்லாமிய மாணவரொருவரை சக மாணவர்களைக் கொண்டு ஆசிரியையே அடிக்கச் சொன்ன வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆசிரியை இந்து - இஸ்லாம் என மதரீதியில் பிரச்னை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை.

விளக்கம்

இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் பள்ளியில் அதிக அளவில் இஸ்லாமிய மாணவர்கள்தான் உள்ளனர். மாணவனிடம் கண்டிப்புடன் இருக்குமாறு அவருடைய பெற்றோரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது.

நான் மாற்றுத்திறனாளி, என்னால் எழுந்து நிற்க முடியாது. அந்த மாணவன் கடந்த 2 மாதங்களாக வீட்டுப்பாடம் எழுதவில்லை. ஆகையால், 2 - 3 மாணவர்களை வைத்து அந்த மாணவனை அடிக்கமாறு கூறினேன். எனது தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், இதற்காக நான் வருத்தப்படவில்லை. தேர்வுகள் நெருங்கி வருவதால் இஸ்லாமிய பெண்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு இச்சமயத்தில் அழைத்து செல்ல வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், வீடியோவை எடிட் செய்து இஸ்லாமியர் என்ற வார்த்தையை எடுத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.  

SOURCE:ibctamilnadu


 



Post a Comment

Previous Post Next Post