குரங்குகளுக்கு விருந்து! மகிழ்விக்க குரங்கின் முன் நடனமாடும் மனிதர்கள்! விசித்திர திருவிழா

குரங்குகளுக்கு விருந்து! மகிழ்விக்க குரங்கின் முன் நடனமாடும் மனிதர்கள்! விசித்திர திருவிழா


3000 ஆண்டுகள் புராதனமான தாய்லாந்தின் லோப்புரி நகர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நகரங்களில் ஒன்றாகும்.

பாங்காக்கிலிருந்து 93 மைல் தொலைவில் அமைந்துள்ள லோப்புரியில், குரங்குகளுக்கு விருந்து கொடுக்கப்படுகிறது, மனிதர்கள் குரங்குகள் முன் நடனமாடுகிறார்கள், குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய தாய்லாந்தில் உள்ள லோப்புரி நகரம், குரங்குகளுக்கு நன்றி செல்கிறது. நவம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை, நகரவாசிகள் 3,000 நீண்ட வால் கொண்ட குரங்குகலுக்கு பிரத்தியேகமாக விருந்து நடத்துகிறார்கள். 

வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளை கோபுரம் போல் குவித்து விருந்தளிக்கின்றனர். 

பழங்கள், காய்கனிகளைத் தவிர, நூற்றுக்கணக்கான் தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் வழங்கி குரங்குகளை குஷிப்படுத்தும் திருவிழா . 

சுற்றுலாப் பயணிகளை தங்கள் நகரத்திற்கு ஈர்ப்பதற்காக உள்ளூர்வாசிகள், குரங்குகளுக்கு "நன்றி" சொல்லும் திருவிழா இது.

பாங்காக்கிலிருந்து 93 மைல் தொலைவில் அமைந்துள்ள லோப்புரி குறைந்தது 3,000 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகிறது. இந்நகரம் இது தாய்லாந்தின் பழமையான மற்றும் மிகவும் வரலாற்று நகரங்களில் ஒன்றாகும். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மதிப்புள்ள மனித வசிப்பிடத்தின் காரணமாக, நகரம் பல்வேறு நாகரிகங்கள் மற்றும் வம்சங்களைச் சேர்ந்த எண்ணற்ற பழங்கால தளங்களைக் கொண்டுள்ளது.

லோப்புரியில் உள்ள ஃபிரா ப்ராங் சாம் யோட் கோவிலின் இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது, அங்கு குரங்குகள் விருந்தினர்களாக உள்ளன. இந்த விழா குரங்கு பஃபே திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

குரங்கு உடை அணிந்த மனிதர்கள் குரங்குகளை குஷிப்படுத்த அவற்றின் முன் நடனமாடுகிறார்கள்.

சுமார் இரண்டு டன் உணவுப்பொருட்களைக் கொண்டு உணவு பிரமிடுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் ஏறி குரங்குகள் புகுந்து விளையாடும்.

குரங்கு அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளம் ராமாயண காலத்திலிருந்தே குரங்குகளுக்கு மரியாதை இருந்து வருகிறது. குரங்குகள் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாக போற்றப்படுகின்றன.

SOURCE:zeenews


 



Post a Comment

Previous Post Next Post