சீனா தன்நாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பது நிறுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடப்பில் இருக்கும் இந்த நடைமுறை நீக்கப்படுகிறது.
சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை அறிமுகம் ஆனபோது தத்தெடுப்புக்காகக் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் நடப்புக்கு வந்தது.
கோவிட் நோய்த் தொற்றின்போது பெய்ஜிங் அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாய் நிறுத்திவைத்திருந்தது.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சீனா கூறியது.
அந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கான காரணத்தைப் சீன அரசு இன்னமும் தெளிவுபடுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments