Ticker

6/recent/ticker-posts

உள்ளங்கை, உள்ளங்காலில் வியர்வை வர என்ன காரணம்?


சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்வை வந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

பொதுவாக வியர்வை என்பது மனித உடலுக்கு இயல்பான ஒன்று என்று என்பதாக இருந்தாலும் வியர்வை அதிகமாக வெளி வந்தாலும் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பாதங்கள், உள்ளங்கைகள், முகம், நெற்றி, கழுத்து உள்ளிட்ட இடங்களில் இயல்பை விட அதிகமாக வியர்வை வெளிவந்தால் அதற்குரிய காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை செய்ய வேண்டும்.

ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வியர்வை அதிகமாக ஏற்படுவது உண்டு. வியர்வை காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகமான வியர்வைக்கு சில அன்றாட வழிமுறைகளை மாற்றிக் கொள்ளலாம்.

குறிப்பாக தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும், காட்டன் உடைகளை மட்டுமே அணிய வேண்டும், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் ஆகியவை கூறப்படுகிறது.இவை எதுவும் பலனளிக்கவில்லை என்றால் மருத்துவரிடம் காண்பித்து வியர்வைக்கு என்ன பிரச்சனை? குறிப்பாக உள்ளங்கை உள்ளங்கால்களில் அதிக வியர்வைக்கு என்ன பிரச்சனை? என்பதை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

webdunia



 



Post a Comment

0 Comments