என்னோட அந்த பெயர் உலகளவில் பிரபலமாக தோனி தான் காரணம் – சூப்பர் தகவலை சொன்ன விராட் கோலி

என்னோட அந்த பெயர் உலகளவில் பிரபலமாக தோனி தான் காரணம் – சூப்பர் தகவலை சொன்ன விராட் கோலி


இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்பது உறுதி.

தற்போது 35 வயதான விராட் கோலி 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்று கொடுத்தவர். தனது சிறப்பான ஆட்டத்தால் வெகுவிரைவில் இந்திய அணிக்கு அறிமுகமான விராட் கோலி ஒரு சில ஆண்டுகளிலேயே பிரபலமான வீரராக மாறினார்.

பின்னர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மலை போல் ரன்களை குவித்து அனைவரையும் வியக்க வைத்தார். நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் அவர் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி உள்ள வேளையில் தற்போது அவரது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். விராட் கோலிக்கு “சீக்கு” என்ற ஒரு புனைப்பெயரும் உள்ளது.

அது உலக அளவில் பிரபலம் அடைய காரணமே தோனி தான் என்று விராட் கோலி கெவின் பீட்டர்சனுடன் நடைபெற்ற ஒரு உரையாடலில் சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : நான் சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அப்போதெல்லாம் எனக்கு குண்டான கண்ணம், பெரிய காதுகள் போன்றவை இருந்ததால் ரஞ்சி தொடரின் போது ஒரு பயிற்சியாளர் எனக்கு “சீக்கு” என்ற புனைப்பெயரை வைத்தார்.

கார்ட்டூன் கதாபாத்திரமான “சீக்கு தி ராபிட்” உடன் ஒப்பிட்டு எனக்கு அந்த பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது விக்கெட் கீப்பிங் செய்கையில் என்னை ஸ்டம்புக்கு பின்னால் இருந்து “சீக்கு, சிக்கு” என்று அழைத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் அந்தப் பெயர் உலக அளவில் பேமஸ் ஆகியது.

நான் எங்கு சென்றாலும் “சீக்கு ஒன் போட்டோ” என்று சொல்லுவார்கள். அப்போது நான் எனக்கு பெயர் இருக்கிறது அது உங்களுக்கு தெரியாதா? என்று கேட்பேன். அந்த அளவுக்கு என்னுடைய புனைப்பெயர் பிரபலமடைய தோனி தான் காரணம் என்று சிரித்துக் கொண்டே பேசி முடித்தார். ஏற்கனவே தோனியை தான் சிறந்த கேப்டன் என்று தெரிவித்த விராட் கோலி தற்போது சுவாரஸ்யமான இந்த சம்பவத்தையும் வெளியிட்டது ரசிகர்கள் மத்த மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post