
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் வீரர் லசித் மலிங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 13 சீசன்கள் விளையாடி அந்த அணி 5 முறை கோப்பை வெல்வதற்கு காரணமாக அமைந்தவர் லசித் மலிங்கா. வித்தியாசமான ஆக்ஷனும், துல்லியமான யார்க்கரையும் கொண்டு உலகின் எந்தவொரு வீரரின் விக்கெட்டையும் கண் இமைக்கும் நொடிகளில் சாய்க்கும் திறமை கொண்டவர்.
2007 காலகட்டத்தில் மலிங்கா உச்சத்தில் இருந்த போது இலங்கை கிரிக்கெட் அணி அடுத்தடுத்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி தகுதிபெற்றது. 145 கிமீ வேகத்தில் யார்க்கர் வீசினால், பேட்ஸ்மேன் நிச்சயம் அவுட் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். அந்த அளவிற்கு லசித் மலிங்காவிடம் துல்லியமும் திறமையும் இருந்தது. ஆனால் காயத்தால் அவரின் வேகம் குறைந்த போது சிறிய பின்னடைவை சந்தித்தார்.
அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த மலிங்கா, ஒருநாள் மற்றும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதன்பின் 2019ஆம் ஆண்டு மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த மலிங்கா, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற மலிங்கா, ராஜஸ்தான் மற்றும் மும்பை நியூயார்க் அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அண்மையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மலிங்காவின் பந்துவீச்சு பயிற்சியால், மும்பை நியூயார்க் அணி கோப்பையை வென்று அசத்தியது. இதனால் உற்சாகமடைந்த மும்பை அணி நிர்வாகம், மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஷேன் பாண்ட் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில், அவரது இடத்திற்கு மலிங்கா கொண்டு வரப்பட்டுள்ளார்
ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு மும்பை அணியின் ஆலோசகராக மலிங்கா செயல்பட்டுள்ளார். தற்போது மீண்டும் மும்பை அணியுடன் மலிங்கா இணைந்திருப்பதால், பல்தான் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் மீண்டும் மும்பை அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
SOURCE:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments