Ticker

6/recent/ticker-posts

பற்றி எரியும் காட்டுத்தீ... உருகும் பனிப்பாறைகள்... அச்சத்தில் விஞ்ஞானிகள்... காரணம் என்ன தெரியுமா?


உலக பெருங்கடல்களின் சராசரி வெப்ப நிலை அண்மைக்காலமாக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

பற்றி எரியும் காடுகள் , உருகும் பனிப்பாறைகள் 
ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், ஒரு பக்கம் வறட்சியால் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள். இப்படி உலகையே கதிகலங்க வைக்கும் இத்தனை பேரிடர்களுக்கும் ஒரே காரணம் பூமி வெப்பமயமாதல் தான்.

பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால், கடல் வெப்பநிலை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. காலநிலை மாற்றம் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் கோபர்நிகஸின் (Copernicus) முடிவுகளின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடலின் மேற்பரப்பு வெப்ப நிலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் பூமிப்பகுதி மட்டுமல்லாமல், ஆழ் கடலிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பெருங்கடல்கள் வெப்பமானால், கடல் வாழ் உயிரினங்களான மீன், திமிங்கலம் என்று அனைத்து கடல் வாசிகளும் குளிர்ந்த நீரைத் தேடி நகரும். இதனால் உணவுச் சங்கிலி சீர்குலைந்து, பல சிக்கல்களுக்கு வித்திடும். அதே போல, சுறாக்கள் உட்பட சில வேட்டையாடும் குனம் கொண்ட கடல் விலங்குகள் வெப்பநிலை அதிகமானால் குழப்பமடைந்து, ஆக்ரோஷமாக மாறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், மனிதர்கள் கடலில் கால் பதிக்க முடியாத நிலையே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

புதைபடிவ எரிபொருட்களை அதிகம் பயன்படுத்தும் போது, அதே அளவு வெப்பத்தை, பூமியின் பெருங்கடல்கள் உள்ளிழுத்துக்கொள்ளும். அதாவது சூழ் நிலையை சமப்படுத்த கடல்கள் முயற்சிக்கின்றன. ஆனால் அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அதீத காலமாகும். கடலின் ஆழத்தில் நிறைய வெப்பம் சேமிக்கப்பட்டுள்ளது, அது இப்போது மேற்பரப்புக்கு வருவது எல் நினோ பாதிப்பாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பூமியும், கடலும் இயற்கையின் சம நிலையை காக்க போராடி வருவது அண்மைக்கால ஆய்வுகளில் அதிகமாக தென்படத்தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு தீர்வு காண உலக நாடுகள் உடனடியாக முன்வர வேண்டும்.

SOURCE:news18


 



Post a Comment

0 Comments