
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் பிசிசிஐ, புதிய டி20 அணியை உருவாக்கியது. அதில் 7 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள ஹர்திக் பாண்டியா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கோப்பையை வென்றதாக காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன்சியை ஏற்றதில் இருந்து ஹர்திக் பாண்டியா மோசமாக விளையாடி வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 வரை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஹர்திக் பாண்டியா மொத்தமாக 25 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 4 மற்றும் அதற்கு கீழ் பேட்டிங் செய்தவர்களில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களில் ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் இருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் கீழ்நிலையில் ஆடும் ஹர்திக் பாண்டியாவின் பலமே ஸ்ட்ரைக் ஹிட்டிங் தான்.
ஆனால் கடந்த ஓராண்டாக ஹர்திக் பாண்டியாவின் ஹிட்டிங் அதிகமாக குறைந்துள்ளது. கடைசி 10 டி20 போட்டிகளில் 2 அல்லது 3 முறை மட்டுமே பந்தை விட அதிக ரன்கள் சேர்த்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. சில போட்டிகளில் நிதானமாக ஆடிய அவர், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். 2 அரைசதங்கள் மட்டுமே கடந்த ஓராண்டில் ஹர்திக் பாண்டியா விளாசி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
கடந்த 10 போட்டிகளில் வெறும் 188 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ஹர்திக் பாண்டியாவின் ஸ்ட்ரைக் ரேட் 110.58ஆக மட்டுமே உள்ளது. அதில் ஒரேயொரு முறை மட்டுமே 30 ரன்களை கடந்து விளையாடி இருக்கிறார். மேலும், 170 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் வெறும் 7 சிக்சர்களை மட்டுமே அடித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது."
SOURCE:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments