Ticker

6/recent/ticker-posts

தப்பியோடிய அமெரிக்க இராணுவ சிப்பாய் வடகொரியாவில் தஞ்சம்!

அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த மாதம், எல்லை கடந்து வட கொரியாவுக்கு தப்பியோடிமைக்கு அமெரிக்க இராணுவத்திலுள்ள இனவாதமே காரணம் வட கொரியா தெரிவித்துள்ளது.

ட்ரேவிஸ் கிங் எனும் 23 வயதான அமெரிக்க சிப்பாய், கடந்த மாதம் தென் கொரியாவிலிருந்து வட கொரியாவுக்குள் நுழைந்தார். அவர் புகலிடம் கோருவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார் எனவும் வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மறுப்பு

எனினும் இவ்விடயத்தை தான் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்படி சிப்பாயை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அழைத்து வருவதற்கே தான் முன்னுரிமை அளிப்பதாகவும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி சிப்பாய் வேண்டுமென்றே எல்லையை கடந்தார் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் தான் வேண்டுமென்றே வட கொரியாவுக்குள் நுழைந்ததாக அச்சிப்பாய் ஒப்புக்கொண்டார் என வட கொரியாவின் அரச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

எனினும், தப்பியோடிய அமெரிக்க இராணுவ சிப்பாய் சட்ட நடவடிக்கை அல்லது தண்டனையை எதிர்கொள்கிறாரா என்பதை அச்செய்திச் சேவை தெரிவிக்கவில்லை.  

SOURCE:canadamirror


 



Post a Comment

0 Comments