Ticker

6/recent/ticker-posts

ஜஸ்ட் மிஸ்: செல்போன் வெடித்து காயமடைந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ்-யை சேர்ந்தவர் ப்ரேம் ராஜ் சிங். 47 வயதான அவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், ப்ரேம் ராஜ் சிங்கின் செல்போன் வெடித்ததில் அவர் காயமடைந்துள்ளார்.

 
இதுகுறித்து ப்ரேம் ராஜ் சிங் கூறுகையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த செல்போனை வாங்கினேன். சம்பவ தினத்தன்று எனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் சூடாகி அதில் இருந்து புகை வருவதை உணர்ந்து, செல்போனை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தேன். அப்போது, அது பலத்த சத்ததுடன் வெடித்து இரண்டு துண்டுகளானது.” என தெரிவித்துள்ளார்.

இதனால், காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரது இடது கை கட்டைவிரல் மற்றும் தொடையில் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த செல்போன் தயாரிப்பாளர்களுக்கு எதிராக மஹுவா கெரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர், “நான் பல ஆண்டுகளாக அதே செல்போன் பிராண்டைப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனது அதிர்ஷ்டம் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.” என்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்போன் வெடிப்பது இது முதல் நிகழ்வு அல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சீன பிராண்டை சேர்ந்த ஸ்மார்ட்போனில் கேம் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த செல்போன் வெடித்து அச்சிறுவன் படுகாயமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE:asianetnews


 



Post a Comment

0 Comments