மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.
6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. ஹைபிரிட் மாடலில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடக்கவுள்ளன. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளன.
இந்த ஆசியக் கோப்பை தொடரில் செப்.2ஆம் தேதி இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. அதேபோல் குரூப் போட்டிகளை தொடர்ந்து, சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மீண்டும் மோதவுள்ளன. அதுமட்டுமல்லாமல் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், 3வது முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீதே அனைத்து ரசிகர்களின் பார்வையும் திரும்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரைல்ரி ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் இலங்கை அணி இருப்பதை யாரும் மறக்க வேண்டாம். கடந்த முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளார்கள். டிஃபெண்டிங் சாம்பியனாக களமிறங்கும் அணியை சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. ஆசியக் கோப்பையை பொறுத்தவரை எந்த அணி கோப்பையை வெல்லும் என்று சொல்லிட முடியாது. 3 அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளன. எனக்கு இந்திய வீரர்களின் செயல்பாடுகளை பார்க்க தான் ஆவலாக உள்ளது.
அதேபோல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களின் உடலை பற்றி நன்று அறிந்துகொண்டுள்ளார்கள். ஒவ்வொரு வீரருக்கும் சரியாக ஓய்வு அளிக்கப்பட வேண்டும். 3 முதல் 4 நாட்கள் ஓய்வு வழங்கப்படாமல் இருந்தால், நிச்சயம் காயம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை இந்திய அணிக்கு பின், அதிக முறை, அதாவது 6 முறை வென்ற அணி இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு