Ticker

6/recent/ticker-posts

"சிங்கப்பூரிடம் எப்போதும் போதுமான அளவு நிதியிருப்பு இருக்கும் என்று நினைப்பது ஆகப்பெரிய தவறான கணிப்பு" - பிரதமர் லீ


படம்: Ministry of Communications and Information
(MCI)

 
சிங்கப்பூரிடம் எப்போதும் போதுமான அளவு நிதியிருப்பு இருக்கும் என்று நினைப்பது ஆகப்பெரிய தவறான கணிப்பு என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

வருமான வளர்ச்சியை விட செலவினத் தேவை அதிகமாக இருப்பதால் நிதியிருப்பைத் தொடர்ந்து பெருக்க விரும்புவதாக அவர் கூறினார்.

CNAவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பிரதமர் லீ அவ்வாறு குறிப்பிட்டார்.

செலவினத் தேவை அதிகரிப்பதையும் சிங்கப்பூர் அதை நிலையான வகையில் ஈடுசெய்ய வேண்டியிருப்பதையும் நான்காம் தலைமுறை அரசியல் தலைமைத்துவம் உணர்ந்திருப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் சிரமமான சூழலைச் சந்தித்தால், அதைச் சமாளிக்க நிதியிருப்பு ஒரு கூடுதல் வழியைத் தருவதாகத் திரு. லீ கூறினார்.

அது பெரும் நிம்மதியையும் உத்தரவாதத்தையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும், சிங்கப்பூர் வெள்ளியை ஊகங்களில் இருந்து பாதுகாக்கவும் நிதியிருப்பின் மொத்த அளவை அரசாங்கம் வெளியிடுவதில்லை என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரிடம் எவ்வளவு நிதியிருப்பு உள்ளது என்ற கேட்கப்பட்டதற்கு அதற்குத் தம்மால் பதில் கூற இயலாது என்றார்.

எனினும் பெரும்பாலான சூழ்நிலைகளுக்கு அது போதுமானது என்று திரு. லீ குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வருவாய்க்குப் பங்களிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்துக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவளிக்க அது போதுமானது என்றும் அவர் கூறினார்.

seithi

SOURCE:CNA


 



Post a Comment

0 Comments