கோவை சுகுணா புரத்தில் 27 / 8 / 2023 அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை "முக்கனி மனிதநேய அறக்கட்டளையின்" 11 ஆம் ஆண்டு விழா மற்றும் மாற்றுத் திறனாளிகள், நலிந்தவர்களுக்கு உதவிப் பொருள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சீரும் சிறப்புடன் இனிதே நடைபெற்றது.
முக்கனி அறக்கட்டளை நிறுவனர் திரு ஓ.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு.சிவ ஆத்மா குருஜி, கோவை மாநகராட்சித் துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன், ஹாஜி அமீர் அல்தாப், திரு.நித்யானந்த பாரதி, டிஸ்கோ காஜா, திரு.காஜா மொய்தீன் உள்ளிட்ட சான்றோர் பலரும் வாழ்த்துரைத்தனர்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர்பாட்சா அவர்கள் சிறப்பு எழுச்சி உரையாற்றினார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தனர்.
அதைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜீவசாந்தி அறக்கட்டளை, ஒரு ரூபாயில் ஒரு உயிர்.,பசியில்லா கோவை அமைப்பு.,கோவை குறுதிக் கொடை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிறைவாக நன்றி நவிலலுடன் விழா மிகவும் சிறப்பாக நிறைவுற்றது.
மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்த இந்த விழாவை முக்கனி மனித நேய அறக்கட்டளை விழாக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
வேட்டை நிருபர்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments