ராஞ்சி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நாள் முழுக்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வருவதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக 5வது முறையாக வென்று கொடுத்தார் தோனி. சென்னை அணியை கடைசி பந்தில் வெற்றிபெற வைத்த ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடியதோடு, ஆனந்த கண்ணீரையும் வெளிப்படுத்தினார் தோனி. 41 வயதிலும் தோனி கிரிக்கெட் களத்தில் சிங்கமாய் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
அதுமட்டுமல்லாமல் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் தோனி ஐபிஎல் தொடருக்கு வந்ததே ரசிகர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி தொடர்ந்து அவதிபட்டார். இதனால் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின், உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதன்பின் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த தோனி, தனது தயாரிப்பில் உருவான படத்திற்கான சில விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். ஆனால் அப்போதும் தோனி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. அதனை தோனியின் மனைவி சாக்ஷி உறுதிபடுத்தினார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தோனி தனது நண்பர்களுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. புதிய ஹேர் ஸ்டைலுடன் காணப்படும் தோனி, முழு நேரமும் ஜிம்மிலேயே ஒர்க் அவுட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் வகையில், 3 மாதங்களுக்கு பிறகும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments